சென்னை: கடந்த மாதம் வருமானவரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் ITR தாக்கல் செய்வதற்கான படிவங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி 2023 முதல் 2024ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய உதவும் வகையில் ITR-1, ITR-2, ITR-3, ITR-4, ITR-6 படிவங்களை CBDT செயல்படுத்தியுள்ளது.
ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு என்ன?: வருமான வரி தாக்கல் (ITR - Income Tax Return) என்பது ஒரு நபர், குறிப்பிட்ட நிதியாண்டில் செலுத்திய வரி மற்றும் வருமானத்தை, வருமான வரித் துறைக்கு தெரிவிப்பதாகும். இந்த ஆண்டு ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31.

வருமானவரித்துறை ஒரு தனி நபரின் வருமானத்தின் அடிப்படையில் ஆறு படிவங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் வரி செலுத்துவோர் எதை தேர்வு செய்ய வேண்டும் என்று அடிக்கடி குழம்பி போகக் கூடும். இந்த ஆறு படிவங்கள் எந்த வகை வரி செலுத்துபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை கீழே பார்ப்போம்.
ITR 1: மொத்த வருமானமாக ரூ. 50 லட்சம் வரை பெரும் நபர்கள், சம்பளம் பெறுபவர்கள், வீட்டுச் சொத்து மற்றும் ரூ. 5,000 வரையிலான விவசாய வருமானம் பெரும் தனிநபர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தும்.
நீங்கள் வணிகம் அல்லது ஏதேனும் தொழில் மூலம் வருமானம் பெறுபவராக இருந்தாலும் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டுச் சொத்துகளிலிருந்து வருமானம் பெற்றாலும், நீங்கள் ITR 1-ஐ தாக்கல் செய்ய முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
ITR 2: வருடத்திற்கு ரூ. 50 லட்சம் ரூபாய்க்கு மேல், வருமானம் உள்ள தனி நபர்கள் மற்றும் HUFகளுக்கு இந்த படிவம் பொருந்தும். வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறுபவர்கள் ITR 2-ஐ தாக்கல் செய்ய முடியாது. பங்குகளில் முதலீடு செய்து விற்றவர்கள், வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருமானம் பெற்றவர்களும், ITR 2 படிவத்தைப் பயன்படுத்தலாம்.
ITR 3: வணிகம் அல்லது தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்களிலிருந்து வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் HUF களுக்கு இந்தப் படிவம் பொருந்தும். நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் நபர்களும் ITR 3 படிவத்தைப் பயன்படுத்தலாம்.
ITR 4: வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறும் தனிநபர்கள், HUFகள் மற்றும் நிறுவனங்கள் இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம்.
ITR 5: இந்த படிவம் நிறுவனங்கள், LLPகள், AOPகள், BOIகள் ஆகியவற்றுக்கானது.
ITR 6: இதை டிஜிட்டல் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இது நிறுவனங்களுக்கான படிவமாகும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications