சென்னை: அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆர்பிஐ சொல்லும் வழிமுறைகளையே பின்பற்றுகின்றன. அதன்படி ஒவ்வொரு சேவிங்ஸ் அக்கவுண்ட்களிலும் எவ்வளவு தொகை வைத்திருக்க முடியும் என்பதற்கும் நிறைய விதிகள் உள்ளன.
சிலருக்கு தங்கள் வங்கி கணக்குகளில் எவ்வளவு தொகை வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் தெரியும். ஆனால் பலருக்கு இந்த விவரங்கள் பற்றித் தெரிவதில்லை. சேவிங்ஸ் அக்கவுண்ட்களின் விதிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இதில் சேவிங்ஸ் அக்கவுண்ட்களுக்கான பண வரம்பு, டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்கள் போன்றவை அடங்கும்.

வங்கிகள் ஏன் சேவிங்ஸ் அக்கவுண்ட்களில் பணவரம்புகளை அமைக்கின்றன?: பாதுகாப்பு மற்றும் மோசடி தொடர்பான பல காரணங்களுக்காக இவை அமைக்கப்படுகின்றன. மோசடி செய்து வங்கி கணக்குகளில் அதிகபட்ச தொகை வரவு வைக்கப்படுவதைத் தடுக்க இது போன்ற விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வருமான வரி விதிகளின்படி சேவிங்ஸ் அக்கவுண்ட்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் அதிகபட்ச தொகையாக ரூ. 10 லட்சம் வரை அவர்களது அக்கவுண்ட்களில் டெபாசிட் செய்ய முடியும். இந்த பணவரம்பிற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால், அந்தத் தொகையைப் பற்றி வருமான வரித்துறைக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.
மேலும் குறைந்தபட்ச தொகையாக ஒரு நபர் தங்களது அக்கவுண்ட்டில் ரூ. 1,000 ரூபாயிலிருந்து ரூ. 10,000 ரூபாய் வரை தொகையை வைத்திருக்க வேண்டும். இந்த அடிப்படை தொகை ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடலாம். சேலரி அக்கவுண்ட்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் எந்த தொகையையும் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் சேவிங்ஸ் அக்கவுண்ட்களாக இருந்து ஜீரோ பேலன்ஸ் இருக்கும்போது வங்கிகள் உங்களிடம் அபராதங்களை வசூலிக்கும்.
நீங்கள் ரூ. 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், கண்டிப்பாக உங்கள் பான் கார்டை பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைத்திருக்க வேண்டும். ஒருவர், ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வது வருமான வரித்துறையின் கவனத்தை ஈர்க்கலாம். ஏதேனும் ஆதாரம் இன்றி தொகை டெபாசிட் செய்யப்பட்டால் 60 சதவீதம் வரி, 25 சதவீதம் கூடுதல் கட்டணம் மற்றும் 4 சதவீத செஸ் கட்டணம் விதிக்கப்படலாம்.
பலர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தங்களது சேவிங்ஸ் அக்கவுண்ட்களில் சேமித்து வைத்திருக்கின்றனர். அது பெரிய பிரச்சனையாகாது. ஆனால், பணம் எங்கிருந்து வந்தது என்ற ஆதாரமே இல்லாமல் அதிக அளவிலான தொகையை சேவிங்ஸ் அக்கவுண்ட்களில் வைத்திருந்தால், அது வருமான வரித் துறையின் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கான ஆதாரம் உங்களிடம் இருந்தால், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட அவசியமில்லை.
நீங்கள் அதிக தொகையை உங்களது சேவிங்ஸ் அக்கவுண்டில் வைத்திருக்கும் போது, அதை ஃபிக்சட் டெபாசிட்களாக மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களுக்கு வட்டியும் வழங்கப்படும். இதனால் பிற்காலத்தில் நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு ஏற்ற வருமானமும் கிடைக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications