சென்னை: பொருளாதார மந்தநிலைகள், சந்தை ஏற்ற இறக்கங்கள், புவிசார் பதட்டங்கள் ஆகியவற்றின் போது தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில், தங்கப் பத்திரங்கள் (SGBs) ஒரு புதிய முதலீட்டு திட்டமாக மாறியுள்ளன. SGBகளில் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டாளர்கள் சில விஷயங்களைக் கருத்தில் கொள்வது நல்லது. அவற்றைப் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.
தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond Plan) என்றால் என்ன?: SGB என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தங்கப் பத்திரங்கள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கும் அரசாங்கப் பத்திரங்கள். அவை கிராம் தங்கத்தில் அளவிடப்படும் அரசாங்கப் பாத்திரங்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டில் தங்கத்தை பணம் ஆக்குதல் திட்டத்தின் கீழ், இந்த தங்கப் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் நீங்கள் அவற்றை 1 கிராம் முதல் வாங்கலாம்.

ஒரு ஆண்டுக்கு பலமுறை மத்திய அரசு நடத்தும் ஏலம் மூலமாக, நீங்கள் SGB களைப் பெறலாம். அவற்றை வாங்க, உங்களிடம் பான் கார்டு இருக்க வேண்டும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது பங்கு தரகு நிறுவனங்களில் இருந்து SGBகளை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம்.
தகுதி: அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தனி நபர்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், HUFகள் என யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்ய முடியும். தனிநபர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரையில் இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம். இந்து கூட்டு குடும்பமாக இருந்தால், அவர்களும் ஒரு கிராம் முதல் 4 கிலோ SGBகள் வரை முதலீடு செய்யலாம் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஒரு கிராம் முதல் 20 கிலோ SGBகள் வரை முதலீடு செய்ய முடியும்.
இந்தப் பாத்திரத்தில் முதலீடு செய்வதன் கால அளவு 8 ஆண்டுகள். இருந்தாலும் உங்களுக்கு தேவைப்பட்டால் 5, 6, 7 ஆண்டுகளில், இந்த திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம்.
வரி விவரங்கள்: இந்த பத்திரங்கள் உங்களுக்கு 2.5% வட்டியை செலுத்துகின்றன, மேலும் நீங்கள் வருடத்திற்கு இரண்டு முறை பணம் பெறுவீர்கள். இந்த வட்டி விகிதம் முதலீட்டு ஆண்டைப் பொறுத்து மாறுபடலாம். இந்த பத்திரங்களிலிருந்து நீங்கள் சம்பாதிக்கும் வட்டிக்கு உங்கள் வருமான வரிக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். ஆனால், அவை முதிர்ச்சியடையும் போது நீங்கள் பெறும் எந்த லாபத்திற்கும் வரி இல்லை.
நீங்கள் முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெறும்போது, அந்தத் தேதியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு உள்ள, 999 தூய்மையான தங்கத்தின் சராசரி இறுதி விலையைப் பயன்படுத்தி, இந்திய ரூபாயில் மீட்பு விலை கணக்கிடப்படுகிறது என்று இந்தியா புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் கூறுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications