சென்னை: இந்தியாவில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஜெயித்துவிட்டால் குறிப்பிட்ட தொகையை பரிசாக பெற முடியும். ஆனால், அவ்வாறு நீங்கள் சம்பாதித்த பணத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
குக் வித் கோமாளி, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுத்தொகை பெறுபவர்களும் வரி செலுத்த வேண்டும். அதேபோல் பிரபலமான கேம் ஷோக்கள் நிறைய தற்போது உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் பிரபலமான கேம் ஷோவான கவுன் பனேகா குரோர்பதி (கேபிசி) சீசன் 16 கடந்த வெள்ளிக்கிழமை அன்று துவங்கியுள்ளது. இதனை வழக்கம் போல் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க உள்ளார்.
இது தமிழில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டது. அதன் முதல் சீசனை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கினார். பிறகு அரவிந்த்சாமி மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்கினர். இந்த கேம் ஷோ மூலமாக, அதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் நீங்கள் ஒரு கோடி வரை சம்பாதிக்க முடியும். ஆனால், அவ்வாறு நீங்கள் சம்பாதித்த பணத்திற்கு வரி செலுத்த வேண்டும். அதன் விவரங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் இது போன்ற பணம் சம்பாதிப்பதற்காக உள்ள கேம் ஷோக்களுக்கு அதிக ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும். கேபிசி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் பிக் பாஸ், டான்ஸ் இந்தியா டான்ஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட் போன் இருப்பதால், பலர் ரீசார்ஜ் செய்து கொண்டு தங்களுடைய நாளின் பாதி நேரத்தை மொபைல் போனிலேயே செலவிடுகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் கேமிங் பிளாட்பார்ம் தளங்களும் அதிகரித்துவிட்டன. இதில் ரம்மி, ட்ரீம் 11 போன்ற விளையாட்டுகள் லாபகரமான பொழுதுபோக்கை வழங்குகிறது.
KBC போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மற்றும் ட்ரீம் 11 போன்ற விளையாட்டுகளில் பணம் சம்பாதிப்பவர்கள், தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வரிகளை செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
கிலியர் டேக்ஸ்-இன் நிபுணர் மணிகண்டன் கூற்றுப்படி, கேம் ஷோ மற்றும் ஆன்லைன் கேம் வெற்றிகள் வருமான வரி சட்டத்தின் கீழ் வருமானமாகக் கருதப்படுகின்றன. இதன் மூலம் வந்த வருமானம், பிரிவு 115BB இன் கீழ் 30% வரிவிதிப்புக்கு உட்பட்டவை. போனஸ் மற்றும் ஊக்கத்தொகையும் இதில் அடங்கும். பிரிவு 194BA இன் கீழ் வரி கழிக்கப்பட்ட பின் தொகை வழங்கப்படும்.
கேம் ஷோ வருமானத்தின் மீதான வரி விதிகள்:
1) ரூ. 10,000 ரூபாய்க்கு மேலான பரிசுத் தொகைக்கு, பிரிவு 194B வருமான வரிச் சட்டத்தின் கீழ் 31.2% TDSக்கு உட்பட்டது.
2) குதிரைப் பந்தயங்களில் வெற்றி பெற்று, பரிசுத் தொகை ரூ. 10,000க்கு மேல் இருந்தால், அதற்கும் TDS பொருந்தும்.
3) இதுபோன்ற வருமானத்திற்கு எதிராக 80C போன்ற 80D போன்ற பிரிவுகளின் கீழ் வருமான வரி விலக்குகள் அனுமதிக்கப்படாது.
சான்றாக, ஒரு கேம் ஷோவில் சோனம் ரூ. 3 லட்சத்தை வென்றால், அவரது வரி 31.2% ஆக இருக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications