இந்திய மக்களின் சேமிப்பு பெரிய அளவில் குறைந்திருக்கும் வேளையில் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கிரெடிட் கார்டுகளை வழங்கும் காரணத்தால் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. எந்தொரு விஷயமும் இலவசமாக கிடைக்காது, அப்படி கிடைத்தால் அதில் கட்டாயம் ஒரு பிரச்சனை இருக்கும். அப்படி தான் இந்த கிரெடிட் கார்டும்.
கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்ய பணம் எளிதாகவும் இலவசமாகவும் கிடைத்தாலும் அதற்கான வட்டி விகிதமும் சற்று அதிகமாக உள்ளது. எனவே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது சில முக்கியமான விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம். இது நிதி முடிவுகளை சரியாக எடுக்கவும், கிரெடிட் கார்டின் நன்மைகளைப் பெறவும் உதவும். மேலும், கிரெடிட் கார்டு விதிமுறைகள் அவ்வப்போது மாறக்கூடும் என்பதால், அவற்றைப் பற்றி தொடர்ந்து அறிந்துகொள்வதும் அவசியம்.
கிரெடிட் கார்டின் அடிப்படை விதிமுறைகளைப் புரிந்துகொள்வது கிரெடிட் கார்டு பெறுபவர்களுக்கு அவசியமான ஒன்று. இது உங்களுக்குத் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.

கிரேஸ் பீரியட் (Grace period) என்றால் என்ன?: ஒவ்வொரு கிரெடிட் கார்டுகளுக்கும் கிரேஸ் பீரியட் இருக்கும். இது பொதுவாக 20 முதல் 30 நாட்கள் இருக்கும். இந்த காலத்தில் எந்தவித வட்டியும் வசூலிக்கப்படாது.
கிரெடிட் கார்டு பெறுவதற்கான குறைந்தபட்ச வயது எவ்வளவு?: பொதுவாக இந்தியாவில் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டுகளின் கட்டணங்கள் எப்படி இருக்கும்?: கிரெடிட் கார்டுகள் வருடாந்திர கட்டணம், பணம் எடுப்பதற்கான கட்டணம் மற்றும் தாமதமாக பில் செலுத்துவதற்கான கட்டணம் என பல்வேறு கட்டணங்களுடன் வருகின்றன.
கிரெடிட் கார்டுகளின் விதிமுறைகள் என்ன?: ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் சொந்த சேவை விதிமுறைகள் உள்ளன. இதில் கிரெடிட் கார்டுகளின் பயன்கள், கட்டணங்கள் மற்றும் பிற முக்கிய விவரங்கள் இருக்கும். கிரெடிட் கார்டைப் பெறுவதற்கு முன் இந்த விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம் .
கிரெடிட் கார்டு கட்டண விதிமுறைகள்: கிரெடிட் கார்டு கட்டணங்கள் புதிதாக கிரெடிட் கார்டு பெற்றவர்களுக்கு குழப்பமாக இருக்கும். கிரெடிட் கார்டு விதிமுறைகள் என்றால் அவை கிரெடிட் கார்டு நிலுவைகளை சரியாக தீர்ப்பது மட்டுமல்ல. பிற கட்டண நுணுக்கங்களையும், அவை உங்களுக்கு ஏற்படுத்தும் தாக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தாமதக் கட்டணங்கள்: கிரெடிட் கார்டு கட்டணத்தை தவறவிட்டால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். தாமதக் கட்டணம் செலுத்துவதால் வட்டி அதிகரிக்கும். இதே போல தொடர்ந்து தாமதமாக பில் செலுத்துவது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கும். குறைந்த சிபில் ஸ்கோர் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் தர மறுக்கும் அபாயம் உள்ளது. இதனால் பிற்காலத்தில் கடன் பெறுவதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
கட்டண தேதி: கட்டண தேதி என்பது உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனம் நிர்ணயித்த ஒரு முக்கியமான தேதி. குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்த வேண்டிய தேதி இதுதான். தாமதக் கட்டணத்தைத் தவிர்க்க இந்த தேதியில் சரியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் நீங்கள் இது போன்ற தேதிகளை மறக்காமல் இருக்க ரிமைண்டர்களை அமைத்துக் கொள்ளலாம் அல்லது ஆட்டோமேட்டிக் பேமென்ட் அமைத்து கட்டணம் செலுத்தலாம்.
மினிமம் பேமெண்ட்: மினிமம் பேமெண்ட் என்பது உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை நல்ல நிலையில் வைத்திருக்க நீங்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய மிகக் குறைந்த தொகையாகும். இந்தத் தொகை பொதுவாக உங்களுடைய நிலுவைத் தொகையின் அடிப்படையில் சிறிய சதவீதத்தில் வசூலிக்கப்படும். இந்த விகிதம் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை கிரெடிட் கார்டு வழங்குனர்களைப் பொருத்து மாறுபடலாம்.
மினிமம் பேமெண்ட் தொகையை மட்டும் செலுத்துவதன் விளைவுகள்: மினிமம் பேமெண்ட் தொகையை மட்டும் செலுத்துவதால் தாமதக் கட்டணம் வராது. ஆனால் மீதமுள்ள தொகைக்கு வட்டி விதிக்கப்படும். நீண்ட காலத்திற்கு மினிமம் பேமெண்ட் மட்டும் செலுத்தினால், வட்டி அதிகரிக்கும். இதனால் முழு தொகையையும் செலுத்துவது கடினமாகும்.
கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்: தொடர்ந்து மினிமம் பேமெண்ட் மட்டும் செலுத்துவது உங்கள் நிதி நிலைமை சரியில்லை என்பதைச் சுட்டிக்காட்டும். இது உங்கள் சிபில் ஸ்கோரை நேரடியாக பாதிக்காது என்றாலும், உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை (credit utilisation ratio) பாதிக்கும்.
மினிமம் பேமெண்ட் கட்டணத்தை தவிர்ப்பது: எப்போதும் முழு தொகையையும் செலுத்துவது நல்லது. இல்லையென்றால், மினிமம் பேமெண்ட்-ஐ விட அதிகமாக செலுத்துங்கள். மாதாந்திர பட்ஜெட் தயாரிப்பது உங்களுக்கு உதவும்.
கிரெடிட் கார்டு பில்லிங் விதிமுறைகள்:
பில்லிங் சைக்கிள்: இந்தியாவில் பில்லிங் சைக்கிள் என்பது ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும். இதில் உங்களுக்கு எப்போது கட்டணம் விதிக்கப்படுகிறது? நீங்கள் எப்போது கட்டணம் செலுத்த வேண்டும்? என்ற விவரங்கள் இருக்கும். இதனை கண்காணிப்பது மிகவும் முக்கியம்.
வட்டியைப் புரிந்துகொள்வது: கிரெடிட் கார்டில் செலுத்தப்படாத தொகைக்கு வட்டி விதிக்கப்படும். இந்தியாவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, அதிக தொகையை செலுத்தாமல் இருப்பது கடன் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள்: சில சமயங்களில் உங்கள் பில்லில் தவறான கட்டணம் இருக்கலாம். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக உங்கள் வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும்.
கிரெடிட் கார்டில் பணம் எடுத்தல்: கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பது எளிதானது என்றாலும், அதற்கு கட்டணம் உண்டு. இது குறிப்பிட்ட அளவு தொகையாகவோ அல்லது எடுத்த தொகையின் சதவீதமாகவோ இருக்கும். இது பொதுவாக அதிகமாக இருக்கும். மேலும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தால், உடனடியாக வட்டி விதிக்கப்படும். ஆனால் பொருட்கள் வாங்கினால் கிரேஸ் காலம் கிடைக்கும். இதனால் கிரெடிட் கார்ட்டில் இருந்து பணம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது .
கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிப்பதற்கான விதிகள்: நேரத்திற்கு கட்டணம் செலுத்தும் வரலாறு மற்றும் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வங்கிகள் லிமிட் அதிகரிக்கக் கேட்டால் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கும்.
கிரெடிட் கார்டு ரிவார்டுகள்: கிரெடிட் கார்டு ரிவார்டுகள் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களுக்கு வசதியாக இருந்தாலும் பல கிரெடிட் கார்டுகளில் ரீவார்டு புள்ளிகளுக்கு எக்ஸ்பைரி தேதி உண்டு. எனவே இந்த எக்ஸ்பயரி தேதிக்குள் ரிவார்ட் புள்ளிகளை பயன்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
முதல் முறையாக கிரெடிட் கார்டு பெறுபவர்கள் மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம், கிரெடிட் கார்டுகளை திறம்பட உபயோகிக்க முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications