டெல்லி: இந்தியாவில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக வேலையின்மை பிரச்சனை உள்ளது.
உலக அளவில் அதிகளவு மக்களை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில், வேலையின்மை என்பது முதன்மை பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலமான உத்திரபிரதேசத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
வேலையின்மை அதிகரிப்பு
இது குறித்து கடந்த பிப்ரவரி 14 அன்று சட்டசபையில், உத்திரபிரதேசத்தில் வேலையின்மை விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12.5 லட்சத்தும் மேலாக அதிகரித்து கிட்டத்தட்ட 34 லட்சமாக அதிகரித்துள்ளதாக யோகி ஆதித்யா நாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்திலேயே இப்படி ஒரு நிலை எனில் மற்ற மாநிலங்களின் நிலையை யோசித்து பார்க்கவே பயமாய் இருக்கிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்
இதே எழுத்துபூர்வமாக சட்டசபையில் எழுதப்பட்ட பதிலில், உத்திரபிரதேசத்தின் தொழிலாளர் அமைச்சர் சுவாமி பிரசாத் மயூரா, பிப்ரவரி 7, 2020ன் படி, 33.93 லட்சம் பேர் வேலையற்றோர் தொழிலாளர் துறையால் நடத்தப்படும் ஆன்லைன் போர்டலில் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதுவே ஜூன் 30 நிலவரப்படி 21.39 லட்சமாக இருந்தது. ஆக கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் 58.43% வளர்ச்சியாகும்.
வேலையின்மைக்கு என்ன காரணம்?
எனினும் இந்த அளவு வேலையின்மை ஏன் அதிகரித்தது. இதற்கு என்ன காரணம் என்பதை இந்த அமைச்சகம் வெளியிடவில்லை. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உத்தரபிரதேசம் 20 கோடி மக்களைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 16% அதிகமாகும்.
இருமடங்கு அதிகரிப்பு
CMIE அறிக்கையின் படி, 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019ம் ஆண்டில் உத்திரபிரதேச வேலையின்மை விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் உத்திரபிரதேசத்தில் வேலையின்மை கடந்த ஆண்டில் 9.95% ஆக உயர்ந்துள்ளது. இதுவே 2018ல் 5.91% ஆக மட்டுமே இருந்தது. வேலையின்மை விகிதம் 10% என்றால், ஒவ்வொரு நூறு பேரிலும் 10 பேர் வேலையற்றவர்கள் ஆகும். இந்த நிலையில் 20 கோடி மக்கள் தொகையில் எத்தனை வேலையின்மை விகிதம் எவ்வளவு கணித்து பாருங்கள்.
சராசரி எவ்வளவு?
இதே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் உத்திர பிரதேசத்தில் வேலையின்மை விகிதம் தேசிய சராசரியான 7.7% விட அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. ஆதாரத்துடன் சொல்லவேண்டுமானால் கடந்த ஜூன் காலாண்டில் 5% ஆகவும், இதே செப்டம்பர் காலாண்டில் 4.5% ஆகவும் படி வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக மொத்தத்தில் மொத்த உள்நாட்டு விகிதம் கடந்த ஒரு வருடத்தில் 2% மேலாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications