கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான துறையின் முன்னணி நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய வர்த்தகத்திற்கு இணையான வர்த்தகத்தை பெற துவங்கியுள்ளது.
இதனால் வேலைவாய்ப்பு சந்தையும் தொடர்ந்து மீண்டு வருகிறது, குறிப்பாக வகைப்படுத்தப்படாத துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதன் வாயிலாக நாட்டின் வேலைவாய்ப்பின்மை ஜனவரி மாதத்தில் சரிந்துள்ளது
ஜனவரி மாதம்
ஜனவரி மாதம் ஒமிக்ரான் தொற்று அதிகமாக இருந்தாலும், அதன் வீரியம் குறைவாக இருந்த காரணத்தால் வர்த்தகத்தில் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இதனாள் வேலைவா்ப்பு இல்லாமல் 66 லட்சம் பேர் மட்டுமே இருக்கும் காரணத்தால் இந்தியாவின் வேவைவாய்ப்பின்மை அளவீடு 6.57 சதவீதமாக சரிந்துள்ளது.
பிப்ரவரி சரிவு
ஜனவரி மாதத்தின் வேலைவாய்ப்பு சந்தையின் வேகத்தை பிப்ரவரி மாதத்தில் தாக்கு பிடிக்க முடியவில்லை, குறிப்பாக பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் உள்ளது. இதனால் பிப்ரவரி மாதத்தின் 16 நாட்களில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
CMIE தரவுகள்
CMIE தரவுகள் படி டிசம்பர் மாதம் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 7.9 சதவீதமாத இருந்த நிலையில் ஜனவரி 2022 இல் வேலைவாய்ப்பின்மை விகிதம் 1.3 சதவீத குறைந்து 6.6% ஆக உள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 66 லட்சமாக உயர்ந்துள்ளது. சரி இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் எது தெரியுமா...?
ஹரியானா மோசம்.. தெலுங்கான டாப்பு..!
ஹரியானா - 23.4 சதவீதம், ராஜஸ்தான் - 18.9 சதவீதம், திரிபுரா - 17.1 சதவீதம், ஜம்மு & காஷ்மீர் - 15 சதவீதம், டெல்லி - 14.1 சதவீதம், ஹிமாச்சல பிரதேசம் - 13.9 சதவீதம், பீகார் - 13.3 சதவீதம், கோவா - 11.6 சதவீதம், பஞ்சாப் - 9 சதவீதம், ஜார்கண்ட் - 8.9 சதவீதம், அசாம் - 8.5 சதவீதம், புதுச்சேரி - 7.8 சதவீதம், மேற்கு வங்காளம் - 6.4 சதவீதம், ஆந்திரப் பிரதேசம் - 6.2 சதவீதம், தமிழ்நாடு - 5.3 சதவீதம், கேரளா - 5 சதவீதம், மகாராஷ்டிரா - 4.2 சதவீதம், உத்தரகாண்ட் - 3.5 சதவீதம், மத்திய பிரதேசம் - 3.2 சதவீதம், சத்தீஸ்கர் - 3 சதவீதம், உத்தரப்பிரதேசம் - 3 சதவீதம், கர்நாடகா - 2.9 சதவீதம், ஒடிசா - 1.8 சதவீதம், மேகாலயா - 1.5 சதவீதம், குஜராத் - 1.2 சதவீதம், தெலுங்கானா - 0.7 சதவீதம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications