வேலையின்மை விகிதம் சரிவு.. NSO சொன்ன குட் நியூஸ்..!

வேலையின்மை என்பது பல நாடுகளும் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும்.

நகர்ப்புறங்களில் 15 வயது அல்லது அதற்கு மேலான நபர்களுக்கான வேலையின்மை விகிதம் ஜனவரி - மார்ச் 2022 காலாண்டுகளில் 9.3%ல் இருந்து, 8.2% ஆக குறைந்துள்ளதாக என் எஸ் ஓ (NSO) தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது.

வேலையின்மை அல்லது வேலையின்மை விகிதம் என்பது தொழிலாளர்களில் உள்ள வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கையாகும்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்கு விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக, ஜனவரி - மார்ச் காலாண்டில் வேலையின்மை விகிதமானது அதிகமாக இருந்தது. அக்டோபர் - டிசம்பர் 2021 காலாண்டில் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதமானது நகர்ப்புறங்களில் 8.7% ஆக இருந்தது என PLFS தரவு சுட்டிக் காட்டுகின்றது.

 பெண்கள் வேலையின்மை

பெண்கள் வேலையின்மை

நகர்புறங்களில் பெண்களிடையே (15 வயது அல்லது அதற்கு மேல்) வேலையின்மை விகிதம் ஒரு வருடத்திற்கு முன்பு 11.8%ல் இருந்து, மார்ச் 2022ல் 10.1% ஆக குறைந்துள்ளது. இது அக்டோபர் - டிசம்பர் 2021ல் 10.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் வேலையின்மை

ஆண்கள் வேலையின்மை

ஆண்களில் நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 2022 ஜனவரி - மார்ச் 2022ல் 7.7% ஆக குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இந்த விகிதம் 8.6% ஆக இருந்தது. இது அக்டோபர் - டிசம்பர் 2021ல் 8.3% ஆக இருந்தது.

தற்போதைய வாராந்திர நிலை?

தற்போதைய வாராந்திர நிலை?

நகர்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான தற்ப்போதைய CWS விகிதம் ஜனவரி - மார்ச் 2022ல் 47.3% ஆக குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 47.5% ஆக இருந்தது. இது அக்டோபர் - டிசம்பர் 2021ல் 47.3% ஆகவும் இருந்தது.

என் எஸ் ஓ ஏப்ரல் 2017ல் PLFS அடிப்படையில் வேலையின்மை விகிதம், தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (WPR), தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR) உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+