இந்திய பொருளாதாரத்தையும், வர்த்தக சந்தையையும் புரட்டிப்போடும் பட்ஜெட் அறிக்கை நாளை வெளியாகும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் துவங்கிய கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். இதில் பொருளாதாரம் முதல் வேலைவாய்ப்பு வரையில் பல முக்கியமான விஷயங்களை மத்திய நிதியமைச்சகம் ஆய்வு செய்து வெளியிட்டு உள்ளது.
இந்தியர்களில் கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்களில் இரண்டில் ஒருவர் இன்னும் வேலைக்கு போக முடியாதவர்களாக உள்ளனர் என பொருளாதார ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் சேவைத் துறை தான் முக்கிய வேலைவாய்ப்பு உருவாக்கும் இன்ஜினாக செயல்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு உருவாக்குவதில் சமீபகாலமாகக் கட்டுமானத் துறை முக்கியமானதாக உயர்ந்து வருகிறது, இதற்கு முக்கியமான காரணம் மத்திய அரசு நாட்டின் உள்கட்டமைப்பு திட்டத்திற்குக் கொடுக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவம் என பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது.

இருப்பினும், கட்டுமான வேலைகள் பெரும்பாலும் முறைசாரா மற்றும் குறைந்த ஊதியம் தரும் வேலைவாய்ப்பு என்பதால், விவசாயத்தை விட்டு வெளியேறும் தொழிலாளர்களுக்கு கூடுதல் வழிகள் தேவை. கடந்த பத்தாண்டுகளில் மோசமான கடன்களின் காரணமாக உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு உருவாக்கம் பெரிய அளவில் நாட்டுக்கு மக்களுக்கு கைகொடுக்கவில்லை, 2021-22ல் இருந்து உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவின் வேலைவாய்ப்புச் சூழல் சிறப்பான வகையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து வருவதைக் காட்டுகின்றன, இதற்கு முக்கியக் காரணமாக இளைஞர்கள் அதிக அளவில் தொழிலாளர் படையில் இணைவது மற்றும் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது (worker-to-population ratio) தான் என இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் 15 வயதுக்கு அதிகமாக இருக்கும் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவீடு மார்ச் 2023ல் 6.8 சதவீதமாக இருந்த நிலையில் மார்ச் 2024ல் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2017-18 ஆம் ஆண்டில் 17.8 சதவீதமாக இருந்த இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம், 2022-23 ஆம் ஆண்டில் 10 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.
2022-23ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தொழிலாளர் படை சுமார் 56.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 45 சதவீதம் பேர் வேளாண்மைத் துறையில், 11.4 சதவீதம் பேர் உற்பத்தி துறையில், 28.9 சதவீதம் பேர் சேவை துறையில், 13 சதவீதம் பேர் கட்டுமான துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவின் தொழிலாளர் படையில் 57.3 சதவீதம் பேர் சுயதொழில் செய்பவர்கள் ஆவர். மேலும், பெண்களின் சுயதொழில் ஈடுபாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டு உள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்.
இதைவிட மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், கடந்த ஆறு ஆண்டுகளாகப் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இந்த வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. 2017-18 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 16.9 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது இது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேலும் EPFO அமைப்பில் சேர்ந்துள்ள மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை கடந்த 5 வருடத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் முறைப்படுத்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications