ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து உலக நாடுகளில் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டு வேலைவாய்ப்பு சந்தை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஆனால் இந்தியாவில் நிலைமை சற்று வித்தியாசமாக இருந்தது என்றால் ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு தான் இந்தியா ரஷ்யா உடனான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வந்தது, குறிப்பாகக் கச்சா எண்ணெய்-ஐ தள்ளுபடி விலையில் பல கப்பல்களில் வாங்கியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் சந்தையில் வெளிப்படும் என்பதை மறுக்க முடியாது.
கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதம் வேலைவாய்ப்பின்மை அளவுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு சிறப்பான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
வேலைவாய்ப்பின்மை விகிதம்
நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஆண்டு 12.6 சதவீதமாக இருந்த நிலையில் 2022 ஏப்ரல்-ஜூன் காலத்தில் 7.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டு
வேலைவாய்ப்பின்மை விகிதம் என்பது 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் இருப்போரின் அளவுகளைக் குறிக்கிறது. ஏப்ரல்-ஜூன் 2021 இல் வேலைவாய்ப்பின்மை அளவு அதிகமாக இருந்தது, குறிப்பாகக் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகள் பல துறைகளில் வேலைவாய்ப்பைப் பாதித்தது.
நகரப்புற வேலைவாய்ப்பின்மை
இந்திய சந்தையில் 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதை உணர்த்தும் வகையில், தற்போது ஜூன் காலாண்டில் நகரப்புற வேலைவாய்ப்பின்மை அளவுகள் 12.6 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உள்ளது. 2022ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டில் இதன் அளவு 8.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊரக வளர்ச்சி
கொரோனா தொற்றுக் காலத்தில் ஊரக வளர்ச்சி சிறப்பாக இருந்த நிலையில் நகரப்புறத்தில் தான் மந்தமாக இருந்தது. இதில் வேலைவாய்ப்பு சந்தையும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.28 சதவீதமாக உள்ளது, இது நகரங்களில் 9.57 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் 7.68 சதவீதமாகவும் உள்ளது.
ஆகஸ்ட் மாத தரவுகள்
ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாநிலத்தில் எவ்வளவு வேலைவாய்ப்பின்மை உள்ளது.
- ஹரியானா - 37.3%
- ஜம்மு & காஷ்மீர் - 32.8%
- ராஜஸ்தான் - 31.4%
- ஜார்கண்ட் - 17.3%
- திரிபுரா - 16.3%
- கோவா - 13.7%
- பீகார் - 12.8%
- டெல்லி - 8.2%
- பஞ்சாப் - 7.4%
- மேற்கு வங்காளம் - 7.4%
- ஹிமாச்சல பிரதேசம் - 7.3%
- தமிழ்நாடு - 7.2%
- தெலுங்கானா - 6.9%
- கேரளா - 6.1%
- ஆந்திரப் பிரதேசம் - 6%
- புதுச்சேரி - 5.2%
- உத்தரப்பிரதேசம் - 3.9%
- கர்நாடகா - 3.5%
- குஜராத் - 2.6%
- மத்திய பிரதேசம் - 2.6%
- ஒடிசா - 2.6%
- மகாராஷ்டிரா - 2.2%
- மேகாலயா - 2%
- சத்தீஸ்கர் - 0.4%
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications