இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் உயர்ந்துள்ள இந்தியாவில் வேலை செய்ய தயாராக இருக்கும் மக்களின் எண்ணிக்கையை காட்டிலும் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளது.
சீனாவுக்கு இணையாக உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவு நான்கு மாத உச்சத்தை தொட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசிற்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொது தேர்தல் வரும் வேளையில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் முக்கிய பிரச்சனையாக இருக்கும்.
ஏப்ரல் மாதம் வேலைவாய்ப்பு சந்தையில் மக்களின் பங்கீடு 25.5 மில்லியன் அதிகரித்து 467.6 மில்லியனாக உயர்ந்தாலும், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 7.8% ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில் 8.11% ஆக உயர்ந்துள்ளது என CMIE அமைப்பின் தலைவர் மகேஷ் வியாஸ்.

வேலைவாய்ப்பின்மை விகித டிசம்பர் மாதத்திற்கு பிறகு மிகவும் அதிகமாகும். ஏப்ரல் மாதம் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஆண்டு 8.51% இலிருந்து தற்போது 9.81% ஆக உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை 7.47% ஆக இருந்த நிலையில் 2023 ஏப்ரல் மாதத்தில் 7.34% ஆக குறைந்துள்ளது சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியா எகனாமியின் தரவு தெரிவிக்கிறது.
ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட 22.1 மில்லியன் வேலைவாய்ப்புகளில் சுமார் 87 சதவீத பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, இதேபோல் ஏப்ரல் மாதம் வேலைவாய்ப்பு விகிதம் மார்ச் 2020க்கு பின்பு அதிகப்படியாக 38.57 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக ரெசிஷன் வரும் என்ற அச்சத்தில் இந்திய ஊழியர்கள் இருக்கும் வேளையில், அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டும் வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது, கூடுதல் பீதியை அளித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications