இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவு பிப்ரவரி 2023ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 7.45 சதவீதமாக உயர்ந்தது, ஜனவரி மாதத்தில் இதன் அளவு 7.14 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியாவில் வேலைவாய்பு இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 3.15 கோடியில் இருந்து 3.3 கோடியாக அதிகரித்துள்ளது.
CMIE அமைப்பு ஒவ்வொரு மாதமும் இந்தியாவின் வேலைவாய்பின்மை அளவீட்டை நகரங்கள், ஊரக அடிப்படையிலும், மாநில வாரியாகவும் கணக்கிட்டு வெளியிடுகிறது.
வேலைவாய்ப்பின்மை அளவு
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவு 7.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த திடீர் உயர்வுக்கு முக்கியமான காரணம் கடந்த 4 மாதங்களாக இந்திய ஊரக பகுதிகளில் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாகி வந்தது ஆனால் தற்போது இதில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து சுமார் 3.3 கோடி பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் மாட்க்கொண்டு உள்ளனர்.
CMIE அமைப்பு
Centre for Monitoring Indian Economy அமைப்பின் தொழிலாளர் சந்தையின் வாராந்திர ஆய்வில் ஜனவரிவ மாதம் தொழிலாளர் பங்கீடு 39.92 சதவீதமாக இருந்தது, பிப்ரவரி மாதம் 39.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொழிலாளர் படையின் எண்ணிக்கை 44.29 கோடியில் இருந்து 44.08 கோடியாக குறைந்துள்ளது.
நகர வேலைவாய்ப்பின்மை
இந்திய நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அளவு கடந்த மாதம் கணிசமாக குறைந்துள்ளது. டிசம்பரில் 10.09 சதவீதம், ஜனவரி 2023ல் 8.55 சதவீதம், பிப்ரவரியில் 7.93 சதவீதம் என படிப்படியாக குறைந்துள்ளது.
கிராம வேலைவாய்ப்பின்மை
ஆனால் இந்திய கிராமங்களில் இதன் நிலை வேறு, டிசம்பர் 2022ல் 7.44 சதவீதம், ஜனவரி 2023ல் 6.48 சதவீதம், பிப்ரவரியில் 7.23 சதவீதம் என பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை 8.30 சதவீதம், 7.14 சதவீதம், 7.45 சதவீதமாக உள்ளது.
அதிக வேலைவாய்ப்பின்மை கொண்ட மாநிலங்கள்
ஹரியானா - 29.4 சதவீதம்
ராஜஸ்தான் - 28.3 சதவீதம்
சிக்கிம் - 21 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் - 17.1 சதவீதம்
ஜார்கண்ட் - 16.8 சதவீதம்
ஹிமாச்சல பிரதேசம் - 13.9 சதவீதம்
பீகார் - 12.3 சதவீதம்
திரிபுரா - 11.7 சதவீதம்
கோவா - 11.1 சதவீதம்
குறைவான வேலைவாய்ப்பின்மை கொண்ட மாநிலங்கள்
தமிழ்நாடு - 3 சதவீதம்
குஜராத் - 2.5 சதவீதம்
கர்நாடகா - 2.5 சதவீதம்
உத்தரகாண்ட் - 2.3 சதவீதம்
புதுச்சேரி - 2.2 சதவீதம்
ஒடிசா - 2.1 சதவீதம்
மத்திய பிரதேசம் - 2 சதவீதம்
சத்தீஸ்கர் - 0.8 சதவீதம்
பிற மாநிலங்கள்
அசாம் - 8.6 சதவீதம்
டெல்லி - 8.6 சதவீதம்
பஞ்சாப் - 8.2 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் - 6.6 சதவீதம்
தெலுங்கானா - 5.8 சதவீதம்
கேரளா - 5.6 சதவீதம்
மகாராஷ்டிரா - 5.6 சதவீதம்
மேற்கு வங்காளம் - 4.4 சதவீதம்
மேகாலயா - 4.1 சதவீதம்
உத்தரப்பிரதேசம் - 4 சதவீதம்


Click it and Unblock the Notifications