வேலையின்மை விகிதம் என்பது மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகமாக இருப்பதாகவும், வேலை வாய்ப்பினை பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் தான் இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக CMIE தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது.
கிராமப்புறங்களில் வேலையின்மை
கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.43% ஆக இருந்த வேலையின்மை விகிதம் 4 வருட சரிவில் காணப்பட்டது. இந்த நிலையில் இது கடந்த அக்டோபர் மாதத்தில் மீண்டும் 7.77% ஆக உச்சம் தொட்டுள்ளது.
குறிப்பாக கிராமப்புற வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.04% ஆக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 5.84% ஆக குறைந்துள்ளது.
நகர்புறங்களில் வேலையின்மை
இதே செப்டம்பர் மாதத்தில் நகர்புறத்தில் வேலையின்மை விகிதம் 7.7% ஆக இருந்த நிலையில், அக்டோபரில் 7.21% ஆக குறைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் வேலையின்மை அதிகரிப்புடன் தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் (LPR) செப்டம்பரில் 39.3% ஆக இருந்த நிலையில், அக்டோபரில் 39% ஆக குறைந்துள்ளது.
கவலையளிக்கும் விஷயம்
எல்பிஆர் விகிதம் குறைந்துள்ளது மிக கவலையளிக்கும் ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் வேலை செய்ய வயதுடைய மக்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், எல்பிஆர் குறைவாக இருப்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுவதாக சி எம் ஐ இ கூறுகின்றது.
விவசாயம் அல்லாத கிராமப்புறங்கள்
வேலைவாய்ப்பின்மை என்பது கிராமப்புறங்களில் குறைவாக இருந்தது. குறிப்பாக விவசாயம் அல்லாத கிராமப்புறங்களிலும் குறைவாக இருந்தது. விவசாயத்துறையில் வேலைவாய்ப்பானது கடந்த நவம்பர் 2021ல் 164 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதன் பின்னர் கடந்த செப்டம்பரில் 134 மில்லியனாகவும் குறைந்துள்ளது. அக்டோபர் 2022ல் 139.6 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டினை காட்டிலும் இது குறைவு தான்.
நகரப்புற நிலவரம்
அதேசமயம் நகரப்புற பகுதிகளில் வேலை விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. இது செப்டம்பரில் 126 மில்லியனாக இருந்த நிலையில், அக்டோபரில் 127.4 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 2.26 மில்லியன் சம்பளதாரர்கள் வேலை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications