இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE)டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் பற்றிய தனது கணிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த விகிதமானது கடந்த டிசம்பர் மாதத்தில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8% என்ற விகிதத்தில் இருந்து, 8.30% ஆக உயர்ந்துள்ளது.
இதில் நகர்ப்புறத்தில் மிக மோசமான அளவாக 10.9% என்ற அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இந்த விகிதமானது முந்தைய மாதத்தில் 8.96% என்ற அளவுக்கு இருந்தது.
நகர்ப்புறத்தில் அதிகரிப்பு
இதே கிராமப்புற பகுதிகளில் வேலையின்மை விகிதம் என்பது 7.44% என்ற அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இந்த விகிதமானது 7.55% என்ற அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகளவில் வேலையின்மை விகிதமானது பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது.
எந்த மாநிலத்தில் மிக அதிகம்
இந்த வேலையின்மை விகிதத்தில் ஹரியானா மாநிலத்தில் மிக மோசமாக 37.4% என்ற அளவுக்கு வேலையின்மை விகிதமானது விரிவடைந்துள்ளது. இதே ராஜஸ்தானில் 28.5% எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதே டெல்லியில் 20.8% ஆகவும், பீகாரில் 19.8% ஆகவும், ஜார்கண்டில் 18% ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
எந்த மாநிலத்தில் மிகக் குறைவு
அதிகளவில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ள மாநிலங்களில் ஒடிசா முதலிடத்தில் 0.9% என்ற அளவுக்கு வேலையின்மை விகிதம் உள்ளது. இதே குஜராத்தில் 2.3% எனும் அளவுக்கு வேலையின்மை விகிதமானது உள்ளது. இதே கர்நாடகாவில், 2.5% ஆகவும், இதே மேகாலயாவில் 2.7% ஆகவும், மகாராஷ்டிராவில் 3.1% ஆகவும் உள்ளது.
தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம்
இது குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் பேசுகையில், வேலையின்மை விகிதத்தின் உயர்வு என்பது மோசமான அளவு இல்லை. ஏனெனில் தொடர்ந்து தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் என்பது உச்சத்திலிருந்து வரும் நிலையில், வேலையில்லா திண்டாட்டம் என்பது உச்சத்திலிருந்து வருகின்றது.
இந்தியாவில் அதிகரிக்கலாமோ?
உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதாரம் என்பது மோசமான சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்தியாவில் அந்தளவுக்கு தாக்கம் இல்லை என்பது சந்தோஷமான விஷயமாகப் பார்க்கப்படுகின்றது. எனினும் நிலவி வரும் மெதுவான மந்த நிலை என்பது மேற்கொண்டு, வேலையின்மை விகிதத்தினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் சவால்
குறிப்பாக இந்தியாவில் அதிகளவிலான மக்கள் தொகைக்கு மத்தியில் , இந்திய அரசும் அதிகளவிலான வேலை வாய்ப்பினையும் உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவே பெரும் சவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications