டெல்லி: பிரதமர் மோடி அரசுக்கு நெருக்கடியை தரும் வகையிலேயே ஒவ்வொரு அறிக்கையும், சமீப காலமாக வெளி வந்து கொண்டிருக்கின்றன.
சொல்லப்போனால் இதன் எதிரொலி இந்தியாவில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இந்திய பொருளாதார கணிப்பு மையம் எனும் CMIE, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 7.5% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வேலையின்மை உயர்வு
இது குறித்து CMIE வெளியிட்ட அறிக்கையின் படி, நாட்டில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கடந்த செப்டம்பர் டிசம்பர் மாதங்களில் 7.5% -மாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதில் மிக மோசமான விஷயம் என்னவெனில் 60% மேல் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்பது தான்.
மோசமான ஆண்டு
ஆக கடந்த 2019ம் ஆண்டு படித்த இளைஞர்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே கருதப்படுகிறது. கடந்த மே - ஆகஸ்ட் 2017ல் வேலையின்மை விகிதம் 3.8% இருந்த நிலையில், தொடர்ந்து ஏழாவது முறையாக வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் CMIE தெரிவித்துள்ளது.
எத்தனை பேரிடம் கணக்கெடுப்பு
இந்த சர்வே 1,74,405 பேரிடம் எடுக்கப்பட்டதாகவும் CMIE தெரிவித்துள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கிராமப்புற இந்தியாவில், நகர்புற இந்தியாவை விட வேலையின்மை விகிதம் குறைவாகவே இருந்தது தான். இது கிட்டதட்ட 9% வித்தியாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேலையின்மை அதிகம்
குறிப்பாக சொல்லப்போனால் இந்த நகர்புற வேலையின்மை விகிதம், தேசிய சராசரியை விட அதிகமாக இருந்தது. இது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் இது சரிவையே பிரதிபலிக்கிறது. கிராமப்புறங்களில் கடந்த செப்டம்பர் - டிசம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.8% ஆக இருந்தது.
கிராமப்புறங்களில் வேலையின்மை
இந்தியாவின் வேலையின்மை விகிதத்தின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 66% பங்கினை கிராமப்புற இந்தியா கொண்டுள்ளது. ஆக கிராமப்புற இந்தியாவின் வேலையின்மை விகிதமானது ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்தினை குறைப்பதில் பங்கு கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் வேலையின்மை குறைந்தால், அது ஒட்டுமொத்த விகிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தரமற்றது
எனினும் கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பு தரமற்றது என்றும் CMIE தெரிவித்துள்ளது. CMIE அறிக்கையில் நகர்புற இளைஞர்களில், குறிப்பாக படித்தவர்கள் அதிகமாக வேலையின்றி காணப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளது. அதிலும் 20 - 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வேலையின்மை விகிதம் 37% இருப்பதாக அறிவித்தாலும், அவர்களில் 60% அதிகமான பட்டதாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் அவர்களில் சராசரி வேலையின்மை விகிதம் 63.4% இருந்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
2019 மிக மோசமான ஆண்டு
இந்த பட்டதாரிகள் வேலையின்மை விகிதமானது. முந்தைய மூன்று ஆண்டுகளில் இருந்த வேலையின்மை விகித பட்டதாரிகளையும் விட அதிமாக இருந்தது. குறிப்பாக 2016ல் வேலையின்மை விகிதம் 47.1%, 2017ல் 47.1%- மாகவும், 2018ல் 55.1% மாகவும், ஆக 2019ல் இது 63.4% - மாக அதிகரித்து, மிக மோசமாக அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கைகள் கூறுகின்றன.
இந்தியாவுக்கு சவால்
20 - 29 வயதிற்குட்பட்ட பட்டதாரிகளுக்கு வேலையின்மை விகிதம் 42.8% ஆக உள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஒரு முக்கிய சவால் என்னவெனில் எல்லா வயதினரும் உள்ள பட்டதாரிகளுக்கான வேலையின்மை விகிதம் 18.5% ஆக உள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரிகள் வேலையின்மை
மேற்கூறியது போலவே முதுகலை பட்டதாரிகள் வேலையின்மை விகிதமும் அதிகமாகவே உள்ளது. எனினும் இது 2016 முதல் இது அவ்வளவாக மோசமடையவில்லை. 2016ல் 24.6% ஆகவும், 2017ல் 25.4% ஆகவும், 2018ல் 22.8% ஆகவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் 2019ல் 23% ஆக அதிகரித்துள்ளது.
சிறப்பாக இல்லை
வேலை தேடும் 20 - 24 வயதிற்குட்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த வயதினருக்கான வேலையின்மை விகிதம் 2017ல் 17% ஆக இருந்த நிலையில், 2019ல் இரு மடங்காக அதிகரித்து 37% ஆக அதிகரித்துள்ளது. இதே மே- ஆகஸ்ட் 2017ல் 25 - 29வயதுடைய இளைஞர்களுக்கு வேலையின்மை விகிதம் 8% ஆக இருந்து, 2019ல் 11% ஆக உயர்ந்துள்ளது.
வேலை தேடும் வயது இதுவல்ல
இதே 15 - 19 வயதிற்குள் உள்ள இளைஞர்களுக்கு வேலையின்மை விகிதம் 45% ஆக உள்ளது. எனினும் இளைஞர்கள் வேலை தேடும் வயது இதுவல்ல என்றும், அவர்கள் இந்த வயதில் படிக்க வேண்டும் என்றும், அவர்கள் அப்படியும் வேலை தேடுகிறார்கள் என்றால், அவர்களை கண்டறிவது கடினம் என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications