மீண்டும் அதிகரிக்கும் வேலையின்மை.. ஆதாரம் காட்டும் CMIE..!

டெல்லி: கடந்த நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.8% ஆக அதிகரித்துள்ளது.

இது கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சமீப வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தான தரவானது, நவம்பர் 22வுடன் முடிவடைந்த வாரத்தில், மீண்டும் அதிகரித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் வேலையின்மை.. ஆதாரம் காட்டும் CMIE..!

இது குறித்து CMIE வெளியிட்ட அறிக்கையின் படி, நாட்டில் வேலையின்மை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இது கடந்த நவம்பர் 22வுடன் முடிவடைந்த வாரத்தில் 7.8 சதவீதமாகவும், இதே தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 39.3 சதவீதமாகவும் உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக வேலைவாய்ப்பு விகிதம் 36.24 சதவீதமாக குறைந்துள்ளது. இது தொழிலாளர் சந்தையை மேலும் பலவீனப்படுத்துகிறது. எனினும் பண்டிகை காலங்களில் உழைக்கும் வயதினரின் போதுமான விகிதாச்சாரத்தினையும் கணக்கிட முடியாமல் இருப்பதையும் இது பிரதிபலிக்கிறது என்றும் CMIE அறிக்கை கூறுகின்றது.

கடந்த 4 வாரங்களாக தொழிலாளர் சந்தை சற்று தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில், நவம்பர் 22 வேலைவாய்ப்பு விகிதம் ஜூன் மாத இறுதியில் இருந்து மீட்கப்பட்டதிலிருந்து மிக குறைந்த, வேலைவாய்ப்பு விகிதமாகும். நவம்பர் 15-வுடன் முடிவடைந்த வாரத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 37.38 சதவீதமாகவும் இருந்தது.

வேலைவாய்ப்பு விகிதம் லாக்டவுனுக்கு முந்தைய நிலையை எட்டவில்லை என்றும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. லாக்டவுன் தளர்வுகளுக்கு பின்பு, மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு விகிதம் இந்திய பொருளாதாரத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சிறந்த சான்றாகும். ஏனெனில் இது உழைக்கும் வயது மக்கள் தொகையின் கணிப்புகளை வெளியிடுகிறது. 2019 - 2020ம் ஆண்டில் வேலை வாய்ப்பு விகிதம் 39.4 சதவீதமாக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 27.2 சதவீதமாகவும், இதே மே மாதத்தில் 30.2 சதவீதமாகவும் இருந்தது. எனினும் இது அக்டோபரில் 37.8 சதவீதமாக உயர்ந்துள்ளது நல்ல விஷயம் தான். ஆனாலும் இது லாக்டவுனுக்கு முந்தைய நிலையை இன்னும் எட்டவில்லை என்பதே நிபுணர்களின் கணிப்பு.

நவம்பரில் முதல் மூன்று வாரத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் சற்று மெதுவாக இருந்தாலும், வலுவான வளர்ச்சியினை கண்டுகிறது. இது நவம்பர் முதல் வாரத்தில் 37.5 சதவீதமாகவும், இரண்டாவது வாரத்தில் 37.4 சதவீதமாகவும், மூன்றாவது வாரத்தில் 36.2 சதவீதமாகவும் உள்ளது கவனிக்கதக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+