இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகத்தை இழந்த பல நிறுவனங்கள் மூடிய காரணத்தால் பல கோடி பேர் நாடு முழுவதும் வேலையை இழந்து வருகின்றனர்.
இதனால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மார்ச் மாதம் 6.50 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாத முடிவில் நாட்டின் 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது மே மாதம் 16ஆம் தேதி முடிந்த வாரத்தில் மட்டும் வேலைவாய்ப்பின்மை 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் அதிகமாக அளவீடாகப் பார்க்கப்படுகிறது என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல் மே 19ஆம் தேதி வரையிலான கடந்த 30 நாட்களில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நகர்ப்புறத்தில் 11.8 சதவீதமாக உயர்ந்து வருகிறது, கிராமப்புறத்தில் 8.8 சதவீதமாக உள்ளது.
கொரோனா தட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் நகரங்களில் அதிகரித்து வரும் காரணத்தால் மே 1ஆம் தேதி 9.60 சதவீதமாக இருந்து நகரத்து வேலைவாய்ப்பின்மை விகிதம், மே 19ஆம் தேதி 11.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முதல் கொரோனா அலை முடிவதற்குள் 2வது கொரொனா தொற்று அலை வந்துள்ள காரணத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் வர்த்தகச் சந்தையிலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் உருவாகியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் 2வது அலையின் காரணமாகக் கடந்த 6 மாதம் உருவான வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை முழுமையாக இழந்துள்ளோம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications