புனே: இந்தியாவில் அண்மை காலமாக கொரிய கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் கொரிய வாழ்க்கை முறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இரண்டு நண்பர்கள் இணைந்து கொரியன் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய பிராண்டினை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளனர்.
யுனி சியோல்(UNI SEOUL) என்பது 2023 ஆம் ஆண்டில் கௌரவ் கர்மாணி மற்றும் மோஹித் குரானா என்ற இரண்டு நண்பர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். புனேவை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் முழுக்க முழுக்க கொரியன் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. கௌரவ் கர்மாணி மற்றும் மோஹித் குரானா ஆகியோர் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.

மோகித் தொழில்நுட்ப உலகில் கால் பதிக்க கௌரவ் கர்மாணி சில்லறை விற்பனை துறையில் வேலை செய்து வந்தார். பாஸ்ட் ஃபேஷன் துறையில் கொரிய பொருட்களின் தாக்கம் இருப்பதை கண்டறிந்த இவர்கள் கொரியா கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு லைப் ஸ்டைல் பிராண்டை உருவாக்க வேண்டும் என விரும்பினர். இப்படிதான் யுனிசியோல் என்ற நிறுவனம் உருவானது.
2023 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் முதலீட்டில் யுனிசியோல் நிறுவனத்தை புனேவில் தொடங்கினர். தற்போது இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக இரண்டு கடைகள் நிறுவப்பட்டுள்ளன. இங்கே வீட்டுக்கு தேவையான பொருட்கள் ,அழகு சாதன பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள், பொம்மை ,பைகள் மற்றும் பிற பேஷன் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் கொரிய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. 99 ரூபாய் முதல் 999 ரூபாய் வரை இவர்களிடம் இருக்கும் பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 200 வியாபாரிகளிடமிருந்து இவர்கள் பொருட்களை வாங்கி தங்களுடைய கடைகளில் விற்பனை செய்கின்றனர் .தரமானதாக இருக்க வேண்டும், அனைவரும் வாங்கக்கூடிய பொருட்களாக இருக்க வேண்டும், இந்திய வாழ்க்கை முறைக்கும் அவை பொருந்துபவையாக இருக்க வேண்டும் என்ற மூன்று விஷயங்களின் அடிப்படையில் தான் தங்களுடைய கடைகளில் கொரியாவை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவிக்கின்றனர் .
முதன்முறையாக இவர்கள் ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு புனே பீனிக்ஸ் மாலில் தங்களுடைய கடையை திறந்தனர். இதனை அடுத்து நாசிக்கில் உள்ள சிட்டி சென்டர் மாலில் மற்றொரு கடையை திறந்தனர். தற்போது இவர்கள் ஆன்லைன் வாயிலாகவும் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களது முதல் கடையான யுனி சியோல் மாதத்திற்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
அதேவேளையில் நாசிக்கல் இருக்கக்கூடிய மற்றொரு கடையானது 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. இணையதள மூலமாக இவர்களுக்கு கிட்டத்தட்ட 27% வருமானம் கிடைக்கிறது. ஓராண்டுக்கு இவர்கள் 35 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதாக தெரிவிக்கின்றனர்.
2024 ஆம் நிதி ஆண்டில் தங்களுடைய கடைகள் மற்றும் இணையதள விற்பனை வாயிலாக 5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக தெரிவிக்கின்றனர். கடைகளின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த வேண்டும் என்றும் வருமானத்தை 300 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தான் தங்களுடைய நோக்கம் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications