சென்னை: இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் புரட்சி பெரும் நன்மையைக் கொடுத்துள்ளது, பெட்டிக் கடை முதல் கோவில் உண்டியல் வரையில் அனைத்து இடத்திலும் QR கோடு மூலம் பேமெண்ட் செய்யும் வசதிகள் வந்துவிட்ட நிலையில் தற்போது இதேபோன்ற புரட்சியை கடன் சேவையிலும் கொண்டு வர ஆர்பிஐ முயற்சி செய்ய துவங்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய தொழில்நுட்ப தளம் தான் இந்த Unified Lending Interface (ULI), விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் இந்த தளத்தின் வாயிலாக நாட்டு மக்களுக்கு எளிதாகக் கடன் அளிக்கும் சேவை வழங்கப்படும். தற்போது இத்தளம் பைலட் முறையில் உள்ள நிலையில், ULI தளம் மூலம் சிறிய கடன் மற்றும் கிராமப்புற மக்களுக்கான கடன் வாங்குபவர்களுக்குக் கடன் மதிப்பீட்டிற்குத் தேவையான நேரத்தை அதிகளவில் குறைத்து பாதுகாப்பான முறையில் வழங்கப்பட உள்ளது.

இந்த ULI திளம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மற்றொரு தளமான Open Credit Enablement Network-கிற்கு (OCEN) இணையாக உள்ளது. iSPIRT என்னும் திங்க் டேங்க் அமைப்பு சான் இந்த OCEN தளத்தை உருவாக்கி 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. OCEN என்பது இந்தியாவில் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் சேவையை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு APIs ஆகும்.
ஆனால் யூஎல்ஐ என்பது தனிநபருக்கான கடன் அளிக்கும் சேவையாகும். இது நாட்டு மக்களுக்கு அவர்களின் நிதி நிலையை பொறுத்து கடன் சிறிய தொகை கடன்களை வழங்குகிறது. இந்த ULI தளம் மூலம் போலியாகக் கடன் செயலிகளின் இம்சையில் இருந்து மக்கள் காப்பாற்றப்படும் முயற்சியாகத் தெரிகிறது. ஆர்பிஐ இத்தளம் குறித்தும் முழு விபரத்தை இன்னும் வெளியிடவில்லை.
ULI மற்றும் OCEN இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் என்ன?: ULI தளத்திற்கு ஒரு தனிநபரின் நிதியியல் தொடர்பான டிஜிட்டல் தகவல்கள் தடையற்ற முறையில் பல தரவு சேவை வழங்குபவர்களிடமிருந்து கடன் வழங்குபவர்களுக்கு எளிதாக்கக் கிடைக்க வழி செய்கிறது. இதில் பல மாநிலங்களின் நில ஆவணங்களும் பகிரப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு தனிநபரின் கடனை திருப்பி செலுத்தும் திறன் குறித்த எளிதில் ஆய்வு செய்து கடன் அளிக்கப்படும்.
இந்த யூஎல்ஐ தளம் மூலம் இந்தியாவில் வேகமாகக் கடன் பெற முடியாத விவசாய துறை மக்கள் மற்றும் MSME கடன் வாங்குபவர்களுக்குக்காணக் கடன் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OCEN, MSME களுக்கு பணப்புழக்க அடிப்படையிலான கடன் வழங்குவதைச் செயல்படுத்த மட்டுமே உள்ளது. ஆனால் ULI தனிநபர்களுக்கான கடன் வழங்குவதில் கவனம் செலுத்த உள்ளது.
இதுவரை வழங்கப்பட்ட கடன்களின் அளவு என்ன? : OCEN தளத்தில் வாயிலாக இதுவரை ரூ. 168 முதல் ரூ. 10 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்களை வழங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சராசரி கடன் அளவு என பார்த்தால் 60-90 நாட்களுக்கு ரூ.40,000 ஆகும். இது சீரற்ற வணிகம் கொண்ட நிறுவனங்களால் ஒரு வருட மூலதன கடன்களைப் பெற முடியாத சிறு வணிக நிறுவனங்களுக்கான நிதியியல் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்கிறது.
ULI இன் பைலட்டிலிருந்து பெற்ற அனுபவங்கள் இன்னும் ஆர்பிஐ பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இது மக்களுக்குக் கடன் வழங்குவதைத் தடையற்ற வகையில் வழங்குவது மட்டும் அல்லாமல் ஆவணங்கள் பயன்படுத்துவதைக் குறைத்து விரைவான முறையில் நிதியை வாடிக்கையாளர்களுக்குச் சேர்க்கும் பணியை செய்கிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications