மோடி தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (Unified Pension Scheme - UPS) அரசு ஒப்புதல் அளித்துள்ளது மூலம், நாட்டின் அனைத்து அரசு ஊழியர்களும் இத்திட்டம் குறித்துத் தான் பேசி வருகின்றனர். இத்திட்டத்தில் அப்படி என்ன நன்மைகள் உள்ளது, வாங்கு முழுசா தெரிஞ்சிக்கலாம்.
இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்தார். இது 23 லட்சம் ஊழியர்களைப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஓய்வு பெற்ற பிறகு அரசு ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இத்திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் மாநில அரசும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
உறுதியான ஓய்வூதியம்: குறைந்தது 25 ஆண்டுகள் சேவை செய்த அரசு ஊழியர்கள், ஓய்வுபெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகையை உறுதியான ஓய்வூதியமாகப் பெறுவார்கள். 25 ஆண்டுகளுக்குக் குறைவான சேவையுடன் இருப்பவர்களுக்கு, ஓய்வூதியம் அவர்களின் பணியின் காலத்திற்கு ஏற்பட விகிதாச்சாரத்தில் வித்தியாசம் செய்யப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும். இதேபல் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என குறைந்தபட்ச தகுதி வாய்ந்த சேவை காலம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உறுதியான குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் பெறும் ஒரு ஊழியரின் மரணம் ஏற்பட்டால், அவரது துணைவர், அந்த ஊழியர் இறப்பதற்கு முன் பெற்ற ஓய்வூதியத்தில் 60% உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் பெறுவார்கள்.
உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தது 10 ஆண்டுகள் சேவை செய்த ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற பிறகு மாதம் ரூ. 10,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதியளிக்கப்படுகிறது.
பணவீக்க குறியீடு: உறுதியான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் இரண்டும் பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஓய்வூதியம் அளிக்கப்படும். இந்த சீர்திருத்தம் ஓய்வூதிகள் பணவீக்கத்துடன் ஒத்துப்போகும்படி உறுதி செய்கிறது. இதன் டிஏ - டிஈ மாற்றங்களும் இணைக்கப்படும்.
அகவிலைப்படி: பணியில் இருக்கும் ஊழியர்களைப் போலவே, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வு பெற்றவர்களும் தொழிலாளர்களுக்கான இந்தியாவின் அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி பெறுவார்கள்.
ஓய்வு பெறும் போது கிடைக்கும் லம்ப் சம் தொகை: கிராஜுவிட்டிக்கு கூடுதலாக, ஊழியர்கள் ஓய்வு பெறும் போது லம்ப் சம் தொகை பெறுவார்கள். இந்தத் தொகை, ஓய்வு பெறும் நாளில் ஊழியரின் மாதாந்திர ஊதியத்தில் (சம்பளம் மற்றும் அகவிலைப்படி உட்பட) 1/10 பங்கு, சேவையின் ஒவ்வொரு முழு ஆறு மாதங்களுக்கும் கிடைக்கும். இந்த லம்ப் சம் தொகை உறுதியான ஓய்வூதியத்தின் அளவை குறைக்காது. லம்ப் சம் தொகை அம்சம் தான் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications