மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக, ஒன்றிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme - UPS) ஜனவரி 24, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய வருமானத்தை வழங்குவதே இந்த முக்கிய திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Unified Pension Scheme என்பது தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மற்றும் NPS ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களின் நன்மைகளை இணைக்கும் ஒரு ஹைப்ரிட் திட்டமாகும். NPS திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த யூபிஎஸ் திட்டத்திற்கு மாற்ற வாய்ப்பு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஒருவர் மாறுவதற்கு முன்பு இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் தகுதி ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உத்தரவாத ஓய்வூதியம்: குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சேவை முடித்த ஊழியர்கள் ஓய்வு பெறும் போது மாதம் ரூ.10,000 என்ற குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம் பெற தகுதி அடைவார்கள்.
தகுதி அளவுகோல்: இந்த திட்டம் பல்வேறு ஓய்வு காலநிலைகளை உள்ளடக்கியதாக உள்ளது. அதாவது ஒருவர் ஒய்வு பெறும் காலம், பணி காலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒய்வூதிய தொகை மாறுப்படும்.
குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சேவை முடித்த பின்னர் ஓய்வு பெறும் ஊழியர்கள்.
FR 56(j) விதியின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்கள்
குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவை முடித்த பின்னர் தானாக முன்வந்து ஓய்வு பெறும் நபர்கள்.
ஓய்வூதிய கணக்கீடு: 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை காலம் கொண்ட ஊழியர்களுக்கு, அவர்களின் கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% க்கு சமமான ஓய்வூதியம் பெறுவார்கள். 25 ஆண்டுகளுக்கு குறைவான சேவை காலம் கொண்டவர்கள், அவர்களின் சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் பெறுவார்கள்.
பணி நீக்கம் செய்யப்பட்ட, பணியிலிருந்து நீக்கப்பட்ட அல்லது தன்னார்வமாக பதவி விலகிய ஊழியர்களுக்கு UPS பொருந்தாது என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
ஓய்வுக்குப் பிந்தைய நலன்கள்:
குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் மறைந்தால், கடைசியாக வழங்கப்பட்ட தொகையில் 60% குடும்ப ஓய்வூதியம் சட்டபூர்வமாக திருமணமான துணைவருக்கு வழங்கப்படும்.
அகவிலைப்படி தொகை: ஓய்வூதியதாரர்களை பணவீக்கத்திலிருந்து பாதுகாக்க, உறுதி செய்யப்பட்ட தொகை மற்றும் குடும்ப ஓய்வூதியம், பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளைப் போலவே அகவிலைப்படி நிவாரணம் அவ்வப்போது சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஒன்றிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். NPS-ல் பதிவு செய்யப்பட்ட ஊழியர்கள் UPS-க்கு இடம்பெயர வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications