பேசினாலே சம்பாதிக்கலாம்.. இந்தியாவில் கலக்கும் புதிய ஸ்டார்ட்அப்..!

ரீல்ஸ், ஷார்ட்ஸ் என ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் அதிகப்படியான தகவல்களை நுகர்கிறோம். ஆனால் அதில் எது சரியானது, எது நமக்கு பொருத்தமானது என்ற குழப்பம் தான் இறுதியில் மிஞ்சுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு வழங்கும் ஒரு தளம் தான் Unikon.ai.

நம்முடைய பிரச்சனைகளை துறை சார்ந்த நிபுணர்களுடன் பேசி தீர்வு காண்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 3 இளம் தொழில் முனைவோர்களான பலாஸ் அர்னேஜா, ஆகாஷ் ஆனந்த், சுமித் ஜா ஆகிய மூவரும் தான் Unikon.ai தளத்தின் நிறுவனர்கள். இந்த தளத்தின் நாம் பயனாளராக பதிவு செய்து கொண்டு எந்த ஒரு சந்தேகங்களையும் கேட்கலாம். அதற்கு அந்த துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக நமக்கு பதில் வழங்குவார்கள்.

பேசினாலே சம்பாதிக்கலாம்.. இந்தியாவில் கலக்கும் புதிய ஸ்டார்ட்அப்..!

பொதுமக்களுக்கும் குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணர்களுக்கும் இடையே தகவல் தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய ஒரு பாலமாக இந்த தளம் இருக்கிறது. தனிப்பட்ட அல்லது தொழில் ரீதியான பிரச்சனைகளையும் சரியான நிபுணர்களிடம் சென்று தெரிவித்து தீர்வு பெற முடியும். இதற்காக இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில் நிபுணர்களுக்கு குறிப்பிட்ட தொகையும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

லிங்குடின் போன்ற தொழில் ரீதியான தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மக்கள் தங்களுடைய சந்தேகங்களையும் கேள்விகளையும் குறிப்பிட்ட நிபுணர்களிடம் முன்வைக்கும்போது பெரும்பாலும் அவர்களுக்கு தேவையான பதில்கள் கிடைப்பது கிடையாது. எனவே இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இப்படி ஒரு தளத்தை உருவாக்கி இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் நிறுவனரான பலாஸ் அர்னேஜா, 21 வயதுக்கு முன்னரே சார்ட்டட் அக்கவுண்ட்டாக தேர்வானவர். இவர் ஸ்விஸ் வங்கி மற்றும் ஹெச்எஸ்பிசி உள்ளிட்ட வங்கிகளில் பணியாற்றியவர். அங்கே இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் டீம் மேனேஜ்மென்ட் பிரிவில் இவர் சிறப்பாக செயல்பட்டார்.

இவர் ஒரு நிகழ்வில் ஆகாஷ் ஆனந்த மற்றும் சுமித் ஜா ஆகியோரை சந்தித்த போது தன் யோசனையை தெரிவித்துள்ளார். மூவரும் இணைந்து வெற்றிகரமாக இந்த தளத்தை நிறுவியுள்ளனர். இவர்களில் ஆகாஷ் ஆனந்த் பெல்லா விட்டா நிறுவனத்தின் நிறுவனர், சுமித் ஜா ஸெப்பே என்ற நிறுவனத்தை உருவாக்கியவர்.

ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த தளத்தில் தங்களை ப்ரொபஷனல் ஆக பதிவு செய்து கொள்ளலாம். சாட் வடிவில் அல்லது ஆடியோ வடிவில் அல்லது வீடியோ கால் முறையில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் . இவ்வாறு பதிலளிக்கும் நிபுணர்களுக்கு இந்த தளம் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்குகிறது.

இந்த நிறுவனம் நிதி திரட்டலின் ஈடுபட்டபோது நிகில் காமத் உள்ளிட்ட 40 முதலீட்டாளர்கள் தாமாக முன் வந்து முதலீடு செய்துள்ளனர். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே 5 ஆயிரம் பதிவிறக்கங்களை பெற்றுள்ளது. தற்போது 50 பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+