இந்தியாவின் பொதுத்துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் , முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் எழுதிய புத்தகத்தின் 2 லட்சம் பிரதிகளை 7.25 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி அவருடைய புத்தகம் வெளியாவதற்கு முன்பே யூனியன் வங்கி 2 லட்சம் பிரதிகளுக்கு ஆர்டர் வழங்கியதாம். முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ndia@100: Envisioning Tomorrow's Economic Powerhouse என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த புத்தகம் வெளியானது.

இந்த புத்தகத்தின் 2 லட்சம் பிரதிகளை 7.25 கோடி ரூபாய்க்கு வாங்கி யூனியன் வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் நூலகங்களுக்கு விநியோகம் செய்துள்ளது. புத்தகம் வெளியாவதற்கு முன்னரே யூனியன் வங்கி 2 லட்சம் பிரதிகளுக்கு ஆர்டர் செய்துள்ளது. இந்த புத்தகத்தை வெளியிட்ட ரூபா நிறுவனத்திற்கு 50 சதவீத தொகையை அட்வான்ஸாக வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த சுப்பிரமணியன் கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஐஎம்எஃபின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். அவருடைய மூன்றாண்டு பதவிக்காலம் நவம்பர் 1, 2022 இல் தொடங்கியது. பதவிக்காலம் வரும் நவம்பர் உடன் முடிவடைய இருந்த நிலையில் பதவி முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு அவரை திரும்ப பெற்றுக் கொண்டது.
அவர் தன்னுடைய புத்தகத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பாக சில முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் தான் அவருடைய புத்தகத்தை யூனியன் வங்கி 2 லட்சம் பிரதிகளை வாங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.
யூனியன் வங்கியின் சப்போர்ட் சர்வீஸ் துறை சார்பாக அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் இந்த புத்தகத்தை வாங்கி விநியோகம் செய்வது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டதாம். இதன்படி 1 லட்சத்து 89 ஆயிரத்து 450 பிரதிகளை வாங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. பேப்பர் பேக் புத்தகத்தை 350 ரூபாய் என ஒவ்வொரு மண்டல அலுவலகமும் தலா 10,525 புத்தகங்களை வாங்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல ஹார்ட் கவர் புத்தகத்தை ஒவ்வொரு மண்டலமும் 10,422 பிரதிகள் வாங்க வேண்டும் என அதன் விலை 597 ரூபாயாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 7.25 கோடி ரூபாய்க்கு யூனியன் வங்கி புத்தகத்தை வாங்கி இருக்கிறது.
இந்த புத்தகத்தின் ஆங்கில பிரதி 10000 பிரதிகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கும் நிலையில் யூனியன் வங்கி 2 லட்சம் புத்தகங்களை வாங்கி தேவையற்ற செலவினை செய்திருப்பதாக வங்கி ஊழியர்கள் சார்பாக மேலாண் இயக்குனர் மணிமேகலைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி சப்போர்ட் சர்வீஸ் பிரிவு தலைவராக இருந்த கிரிஜா மிஸ்ராவை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இருந்தாலும் இந்த விவகாரத்தில் வேறு சிலரின் தலையீடும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications