மத்திய அரசின் பட்ஜெட் பற்றி பல தரப்பில் இருந்தும் பல்வேறு கருத்துகளை பலரும் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி., இந்த பட்ஜெட் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறது. மொத்தத்தில் பல சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து, அனைவருக்கும் ஏற்றமளிக்கும் பட்ஜெட் ஆக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதே இன்னொரு தரப்பானது, இந்த பட்ஜெட்டானது அரசின் பொருளாதார இலக்கான 5 டிரில்லியன் டாலரினை அடைய, இது ஒரு அடித்தளமாக அமையும் என்று தெரிவித்துள்ளது.
கட்டாயப்படுத்தக்கூடும்
அடிப்படையில் மத்திய பட்ஜெட் என்பது ஒரு வருடத்திற்கான அரசாங்கத்தின் திட்டமாகும். ஆனால் இந்த பட்ஜெட் 2021 நீண்டகாலத்திற்கும் பொருளாதாரத்தின் போக்கினை கணிசமாக தீர்மானிக்கிறது. எனினும் அரசின் நெருக்கடியான நிதி நிலைமை காரணமாக வரிகளை அதிகரிக்கவும், மூலதன செலவினங்களைக் குறைக்கவும் அரசாங்கத்தினை கட்டாயப்படுத்தக்கூடும் என்ற அச்சங்கள் நிலவி வருகின்றன.
இலக்கினை அடைய வேண்டும்
பட்ஜெட் 2021, இந்தியா அதன் வளர்ச்சியினை இழக்க தயாராக இல்லை என்பதை காட்டுகின்றது. வரும் ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலரினை அடைய வேண்டும் என்ற உறுதியினை காட்டுகின்றது. குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில், ஆறு தூண்களைக் அடிப்படையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக சுகாதாரம், உடல் & நிதி மூலதனம், உள்ளகட்டமைப்பு, புதுமை மற்றும் ஆர்&டி, குறைந்தபட்ச அரசு மற்றும் அதிகபட்ச நிர்வாகம் என பலவற்றையும் சுட்டிக் காட்டியுள்ளது.
எதிர்பாராத சவால்கள்
கடந்த ஆண்டு கொரோனா, அரசுக்கு எதிர்பாராத பல சவால்களை கொண்டு வந்தது. ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி மிக மெதுவாக வேகத்தில் இருந்த நிலையில், கொரோனா இன்னும் மெதுவாக்கியது. இதனால் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவினைக் காண வழிவகுத்தது. குறிப்பாக அரசின் நிதி வளர்ச்சியினை முடக்கியது. எனினும் அரசு இதனை நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் இந்த பட்ஜெட் வந்துள்ளது. இது வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆத்மா நிர்பார் திட்டத்தில் கவனம்
மொத்தத்தில் இந்த பட்ஜெட் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தினை, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த பட்ஜெட் உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறையில் பெரிய அளவில் முதலீடு செய்வதன் மூலம் ஆத்மா நிர்பார் திட்டத்தில் கவனம் செலுத்துகிறது.
அடித்தளம் தான்
அதோடு தேவையை உருவாக்குவதிலும், வேலைவாய்ப்பினை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது. ஆக இது மேற்கொண்டு வளர்ச்சியினை ஊக்குவிக்கும். அதோடு பொதுத்துறை வங்கிகளுக்கான மறுமூலதன நிதி மூலம் மக்கள் கையில் நிதிப்புழக்கத்தினை அதிகரிக்கும். இப்படியாக ஒவ்வொரு துறையிலும் அரசு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்துள்ளது, ஆக இப்படி பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக வந்துள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications