023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் அறிக்கை தனிநபர்களும், மாத சம்பளக்காரர்களுக்குச் சாதமாக இருக்காது என வெளியான கணிப்புகள் அனைத்தையும் மொத்தமாக உடைத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
அனைவரும் எதிர்பார்த்து இருந்த தனி நபர் வருமான வரி பிரிவில் 5 முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் நிர்மலா சீதாராமன்.
7 லட்சம்
வருமான வரி தான் தனிநபர்களுக்கும், மாத சம்பளக்காரர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்தது. இதைத் தணிக்கும் வகையில் 7 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் (Tax rebate)அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த டாக்ஸ் ரிபேட் அளவு 5 லட்சமாக உள்ளது.
மேலும் இந்த சலுகை பழைய மற்றும் புதிய வருமான விதிப்பு முறைக்குப் பொருந்தும்.
வரி விதிப்பு பலகை
நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த புதிய வருமான வரி விதிப்பு முறையில் இருக்கும் வரி பலகை எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் 2.5 லட்சமாக இருந்த ஜீரோ வரி விதிப்பு அளவு தற்போது புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
புதிய வரி பலகை
0 - 300000 : 0 சதவீத வரி
300000-600000 : 5 சதவீத வரி
600000 -900000 : 10 சதவீத வரி
900000 - 1200000 : 15 சதவீத வரி
1200000 -1500000 : 20 சதவீத வரி
1500000 ரூபாய்க்கு மேல் : 30 சதவீத வரி
standard deduction சலுகை
அனைத்து மாத சம்பளக்காரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அளிக்கப்படும் standard deduction சலுகை புதிய வருமான வரி விதிப்பு கீழ் 52500 ரூபாய் அளிக்கப்படுகிறது.
இது புதிய வருமான வரி விதிப்பு முறையே தேர்வு செய்வோருக்குக் கூடுதல் லாபத்தை அளிக்க உள்ளது.
உச்சபட்ச வரி
உலகிலேயே அதிக வருமான வரி இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருக்கும் நிலையில், அதிகப்படியான வருமான வரி விதிப்பை மாற்றும் முயற்சி பட்ஜெட் 2023 அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது என நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியாவில் அதிகப்படியான வரி தற்போது 42 சதவீதமாக உள்ளது, இதை குறைத்துள்ளது மத்திய அரசு.
சர்சார்ஜ் அளவீடு
அதிகப்படியான வருமான வரி அளவீட்டைக் குறைக்கும் விதமாக வருமான வரி விதிப்பில் இருக்கும் சர்சார்ஜ் அளவீடு 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தற்போது அதிகப்படியான வரி விதிப்பு 42 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாகக் குறைய உள்ளது.
லீவ் என்கேஷ்மெனட்
லீவ் என்கேஷ்மெனட் கீழ் 3 லட்சமாக இருந்த வருமான வரி விலக்கு நிலையில், 2002க்கு பின்பு மாறாமல் அப்படியே இருந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கான அதிகப்படியான சம்பள உயர்வைப் பொருத்து லீவ் என்கேஷ்மெனட் வரம்பு 3 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
புதிய வருமான வரி விதிப்பு முறை
இனி புதிய வருமான வரி விதிப்பு முறை தான் அனைவருக்குமான வரி விதிப்பு முறை. இதேவேளையில் பழைய வரி விதிப்பு முறையும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications