டெல்லி: பரபரப்பான பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு வழியாக மத்திய பட்ஜெட் ஆனது இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பற்பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
அதில் குறிப்பாக கவனம் பெற்ற அறிவிப்புகளில் ஒன்று 2023 - 24ம் நிதியாண்டிற்கான மூலதன செலவானது 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஜிடிபி விகிதத்தில் 3.3% ஆகும்.
இந்த ஒதுக்கீடானது நடப்பு ஆண்டினை காட்டிலும் 37.4% அதிகம் எனலாம். இது நடப்பு ஆண்டில் 7.28 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க முடியும்
இதன் மூலம் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க முடியும் எனலாம். இது உள்கட்டமைப்பு துறை மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக வேலை வாய்ப்ப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இத்தகைய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அரசின் கவனம்?
இது கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் இருந்த மூலதன செலவினை விட மூன்று மடங்கு அதிகம் எனலாம். 2023 - 24ம் நிதியாண்டில் உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலைதுறைகள், ரயில்வே, பாதுகாப்பு போன்ற பல துறைகளையும் மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
நீண்டகால வளர்ச்சிக்கு உதவும்
அரசின் இந்த அறிவிப்பானது இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு காரணமாக அமையலாம். நாட்டில் தொடர்ந்து மூலதன செலவில் கவனம் செலுத்தும்போது, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க முடியும்.
இது வரலாற்றில் இடம்பெறும் அறிவிப்புகளில் ஒன்று. இந்த அளவுக்கு ஒரு நாடு மூலதன செலவினை செய்தால், அது உலகளவிலான மேம்படுத்தப்பட்ட பொருளாதாரத்தினை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு திட்டங்களை திட்டமிட்டிருக்கலாம்.
எதற்கு முக்கியத்துவம்?
மத்திய பட்ஜெட்டில் ரயில், மெட்ரோ ரயில், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து மற்றும் லாகிஸ்டிக்ஸ் உள்ளிட்டவற்றிற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இது உள் நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும். இது தொழில்துறையை மேம்படுத்தும். தொழில் துறை வளர்ச்சியினை ஊக்குவிக்கும். இதன் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும். இது தேவையை ஊக்குவிக்கும். இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கே ஊக்குவிப்பாக அமையும்.
தனியார் முதலீடுகள் அதிகரிக்கலாம்
கொரோனாவின் வருகைக்கு பிறகு தற்போது தான் தனியார் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இனியும் தனியார் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு வளர்ச்சியினை தூண்டும். ஆக இதுவும் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications