2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள வேளையில் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ள வேளையில், தீபக் ஷெனாய் முக்கியமான டிவீட் செய்துள்ளார்.
நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இதனால் நேற்று முதலே பட்ஜெட் குறித்த பரபரப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தீபக் ஷெனாய்
கேப்பிடல் மையிண்ட் வெல்த் என்னும் நிறுவனத்தின் தலைவரான தீபக் ஷெனாய் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக டிவிட்டரில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளர்.
தீபக் ஷெனாய் டிவீட்
தீபக் ஷெனாய் தனது டிவிட்டரில், இன்று பட்ஜெட், நிறையத் தண்ணீர் குடிங்க, வரி குறித்து அறிவிப்பு வரும் வரையில் பெரும்பாலான பட்ஜெட் அறிவிப்பை தவிர்த்துவிடுங்கள். பெரும் ஏமாற்றம் அல்லது தீவிர சலிப்பு அல்லது இரண்டிற்கும் தயாராகுங்கள். உற்சாகமான அறிவிப்பு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. முன்கூட்டியே எச்சரித்துவிட்டேன் என டிவீட் செய்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.
பட்ஜெட் அறிக்கை
2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வருகை தந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவருடன் பட்ஜெட் குழு அதிகாரிகள், நிதியமைச்சக அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
நாடாளுமன்ற கட்டிடம்
பாஜக அரசின் 2024-ம் ஆண்டுத் தேர்தலுக்கு முந்தைய முழுமையான இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதேபோல் இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசிப் பட்ஜெட் அறிக்கை இதுவாகும். அடுத்த முழுப் பட்ஜெட் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்கல் செய்யப்படலாம்.
பெண் நிதியமைச்சர், பெண் குடியரசு தலைவர்
மேலும் மத்திய பட்ஜெட் 2023 அறிக்கை தாக்கல் செய்ய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் நிதியமைச்சர், பெண் குடியரசு தலைவரிடம் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காகச் சமர்ப்பித்துள்ளார்.
வரலாற்று நிகழ்வு
இது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது, இந்தியாவில் இதுவரை இப்படியொரு நிகழ்வு நடந்தது இல்லை. மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications