மத்திய பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று வெற்றிகரமாகத் தாக்கல் செய்த நிலையில், ஆரம்பம் முதல் பெரிய அளவில் மக்களை ஈர்க்காத வேளையில், கடைசியில் தனிநபர் வருமான வரிச் சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு ஒட்டுமொத்த இந்தியாவை அசர வைத்துள்ளார்.
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துள்ளார்.
தனிநபர் வருமான வரிப் பிரிவில் மத்திய அரசு வெளியிட்டு உள்ள 5 முக்கிய அறிவிப்புகள் மூலம் மத்திய அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா..?
மத்திய பட்ஜெட் 2023
மத்திய பட்ஜெட் 2023 உண்மையிலேயே ஜனரஞ்சகமான பட்ஜெட் ஆகவே உள்ளது. ஒருபக்கம் உள்கட்டமைப்பு, கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் என முக்கியமான துறையில் பல முக்கியமான திட்டங்களை அறிவித்து வேலைவாய்ப்புகளை உறுதி செய்த மத்திய அரசு..
வருமான வரித் தளர்வுகள்
மறுபக்கம் வருமான வரித் தளர்வுகள் மூலம் சாமானிய மக்களையும் மாத சம்பளக்காரர்களையும் மனங்குளிர வைத்துள்ளது. ஆனால் இதன் மூலம் மத்திய அரசின் கஜானாவில் ஓட்டை விழுந்துள்ளது.
நடுத்தர மக்கள்
இந்தியா மத்திய பட்ஜெட் 2023 அறிக்கையில் நடுத்தர மக்கள் பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு நிகர வரி வருவாயில் சுமார் 35,000 கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொள்ள உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.
மறைமுக வரிகள்
இதில் முக்கியமாகச் சுமார் 1,000 கோடி ரூபாயை மறைமுக வரிகள் வாயிலாக இழக்க நேரிடும் அதே வேளையில் சுமார் ரூ. 3,000 கோடி வருவாய்க் கூடுதலாகத் திரட்டப்பட உள்ளது. ஆனால் நேரடி வரி வருவாய் அதாவது தனிநபர் வருமான வரி இருக்கும் பிரிவில் மட்டும் இன்றைய அறிவிப்புகள் மூலம் 37000 கோடி ரூபாய் இழக்க உள்ளது.
நேரடி வரி வருவாய்
இதன் மூலம் 38000 கோடி ரூபாய் வரி வருவாய் இழக்கும் வேளையில் 3,000 கோடி வருவாய்க் கூடுதலாகத் திரட்டப்பட உள்ளதால் மொத்த வருவாய் ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் தாக்கத்தை எதிர்கொண்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
35000 கோடி ரூபாய் இழப்பு
இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் நிலையில் இந்த 35000 கோடி ரூபாய் வரி வருவாய் பாதிப்பு அடுத்த நிதியாண்டில் தான் உருவாகும்.
நிதி பற்றாக்குறை
இதேவேளையில் 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிதியியல் பற்றாக்குறை நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் 5.9 சதவீதமாக இருக்கும் எனப் பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
7 லட்சம் வரை டாக்ஸ் ரிபேட்
பழைய மற்றும் புதிய வருமான விதிப்பு முறையின் கீழ் வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கும், மாத சம்பளக்காரர்களுக்கும் வரி சுமையைக் குறைக்கும் வகையில் 7 லட்சம் ரூபாய் வரையில் டாக்ஸ் ரிபேட் (Tax rebate) சலுகை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த டாக்ஸ் ரிபேட் அளவு 5 லட்சமாக உள்ளது.
ஜீரோ வரி விதிப்பு
இது மட்டும் அல்லாமல் 2.5 லட்சம் ரூபாய் வரையில் இருந்த ஜீரோ வரி விதிப்பு அளவு தற்போது புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 50000 ரூபாய்க்கு கூடுதல் வரிச் சலுகை கிடைத்துள்ளது.
இந்த உயர்வு பழைய வருமான வரி விதிப்பு முறைக்கு இல்லை.
புதிய வரிப் பலகை
புதிய வருமான விதிப்பு முறைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால், இதை மேலும் எளிதாக்கும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் புதிய வருமான வரி விதிப்பு முறை கீழ்
0 - 300000 : 0 சதவீத வரி
300000-600000 : 5 சதவீத வரி
600000 -900000 : 10 சதவீத வரி
900000 - 1200000 : 15 சதவீத வரி
1200000 -1500000 : 20 சதவீத வரி
1500000 ரூபாய்க்கு மேல் : 30 சதவீத வரி
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications