2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இதனால் நேற்று முதலே பட்ஜெட் குறித்த பரபரப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு ரெசிஷன் அச்சம் நிறைந்த காலகட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
7 சதவீதம் வரை வளர்ச்சி
இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும், இது பிற பொருளாதார நாடுகளை ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சி அளவீடாகும். ரஷ்யா - உக்ரைன் பாதிப்பு மூலம் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அம்ரித் கால்
அம்ரித் கால்-ன் முதல் பட்ஜெட் அறிக்கை இது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொருளாதார மதிப்பில் 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம், மேலும் உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா ஆக உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
இந்த பட்ஜெட் வேலைவாய்ப்பை உருவாக்குதல், இளைஞர்களின் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி
மேலும் முக்கியமான திட்டத்தில் அரசின் இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமாக நிஸ்வச் பாரத், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, நேரடி பலன் பரிமாற்றம் மற்றும் ஜன்தன் கணக்குகள் ஆகியவற்றிலும் பல மைல்கற்களை அரசு எட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்பு
2023-24 யூனியன் பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான மூலதனச் செலவை அதிகரித்திருப்பது மூலம் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவிலான ஊக்கம் அளிக்கிறது. மேலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று தொழில்துறை தலைவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.
10 லட்சம் கோடியாக
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-24 ஆம் ஆண்டுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான மூலதனச் செலவை 33 சதவீதம் உயர்த்தி 10 லட்சம் கோடியாக அறிவித்துள்ளார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாகும்.
உள்கட்டமைப்பு மூலதன செலவு
கடந்த ஆண்டை விட உள்கட்டமைப்பு மூலதனச் செலவு 33 சதவீதம் அதிகரித்துள்ளது உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவது பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துவதோடு, அதிக வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.


Click it and Unblock the Notifications