மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரிச் சலுகை மற்றும் தளர்வுகள் மூலம் தனிநபர்களும், மாத சம்பளக்காரர்களுக்குச் சாதமாக மாறியுள்ளது.
தனி நபர் வருமான வரிப் பிரிவில் மட்டும் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் சுமார் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் முக்கியமான இதேவேளையில் அதிகப் பலன் அளிக்கக் கூடிய ஒரு அறிவிப்பைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
லீவ் என்கேஷ்மெனட்
லீவ் என்கேஷ்மெனட் கீழ் அரசு வேலையில் இல்லாத ஊழியர்கள் ஓய்வு பெறும் போது 3 லட்சம் வரையிலான தொகைக்கு மட்டுமே வருமான வரி விலக்கு இருக்கிறது. இந்த லீவ் என்கேஷ்மெனட் வரம்பை 3 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம்
லீவ் என்கேஷ்மெனட் வருமான வரி விலக்கு அளவீட்டை 2002க்கு பின்பு மாறாமல் அப்படியே இருக்கிறது. அப்போது அரசு ஊழியர்களின் அதிகப்படியான அடிப்படை சம்பள அளவான 30000 ரூபாய் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது.
25 லட்சம் ரூபாய்
இந்த நிலையில் தற்போதைய அரசு ஊழியர்களுக்கான அதிகப்படியான சம்பள உயர்வைப் பொருத்து லீவ் என்கேஷ்மெனட் வரம்பை 3 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தப் புதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
லீவ் என்கேஷ்மெனட் என்றால் என்ன..?
லீவ் என்கேஷ்மென்ட் என்பது ஒரு பணியாளர் தனது பணி காலத்தில் பயன்படுத்திக்கொள்ளாத லீவ் அதாவது விடுமுறைக்கு, ஈடாக ஒரு ஊழியர் பெறும் பணம். பணவீக்க பாதிப்பால் தத்தளிக்கும் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்த நிலையில் லீவ் என்கேஷ்மென்ட் வருமான வரி விலக்கு வரம்பை 3 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தியுள்ளது.
ஓய்வு அல்லது ராஜினாமா
ஒரு பணியாளர் தனது பணி காலத்தில் பயன்படுத்திக்கொள்ளாத லீவ் அனைத்திற்கும் பணியில் இருந்து ஓய்வு பெறும் போதோ அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும் போதோ கிடைக்கும். இப்பிரிவில் கிடைக்கும் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 10(10AA) கீழ் 300000 ரூபாய் வரையில் வரி தள்ளுபடியை 31 மே 2002 முதல் அளிக்கப்பட்டு வந்தது.
வரி விலக்கு
இதன் மூலம் நீங்கள் ஆபீஸ்-க்கு லீவ் எடுக்காமல், லீவ் பேலென்ஸ்-ஐ சேர்த்து வைத்திருந்தால் மிகப்பெரிய தொகையை ஓய்வு பெறும் போது வரி விலக்குடன் பெற முடியும். அதுவும் 25 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை வரி இல்லாமல் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்ஸ் ரிபேட்
லீவ் எண்கேஷ்மென்ட் தாண்டி பட்ஜெட் அறிக்கையில் தனிநபர்களும், மாத சம்பளக்காரர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்த வருமான வரி விதிப்பில் பெரும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 5 லட்சமாக இருந்த டாக்ஸ் ரிபேட் 7 லட்சம் வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது.
இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications