மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட்டுக்கான கோரிக்கைகளை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு துறைகளில் இருந்து பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் குவிந்து வருகின்றன. மோடி 3.0-க்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கான நிதியை அமைக்கும் வகையில் பட்ஜெட் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் 2024-25 பட்ஜெட்டில் இருந்து தங்கள் எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

யுனிக்ஸ் இந்தியாவின் இணை நிறுவனர் இம்ரான் ககல்வாலா கூறுகையில், "வரவிருக்கும் யூனியன் பட்ஜெட்டில், இந்தியாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களுக்கு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என்று எதிர்நோக்குகின்றனர்.
"Make in India" திட்டம் மற்றும் PLI திட்டம் போன்ற முயற்சிகள் மூலம் இந்திய உற்பத்தியாளர்களுக்கு உதவுவதில் அரசு முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், சந்தையையில் போட்டி அதிகரித்துள்ள காரணத்தினால், இன்னும் தேவைகள் அதிகரித்துள்ளது. சீனா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கு எதிராக போட்டியை உறுதி செய்வதற்காக தக்க நடவடிக்கைகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்.
இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் இந்த பட்ஜெட் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் சர்வதேச நுகர்வோர் சந்தையில் இந்தியா முக்கிய பங்காற்றும் என்று அவர் கூறியுள்ளார்.
2024 முதல் 2025-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை எதிர்நோக்கி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் துறையில் மிகுந்த நம்பிக்கை நிலவுகிறது. அரசின் PLI திட்டங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, முதலீடுகளை ஈர்த்துள்ளது, மேலும் உற்பத்தி திறனை மேம்படுத்தியுள்ளது. வருகின்ற பட்ஜெட்டிலும் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்று அம்பிரேன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அசோக் ராஜ்பால் கூறியுள்ளார்.
இந்திய மின்சார உபகரணங்கள் துறை உலகளவில் முன்னிலை பெறுவதற்கு அரசின் ஆதரவு அவசியம். வரும் பட்ஜெட்டில், மேற்கூறிய நடவடிக்கைகளை அறிவிப்பதன் மூலம், இந்தியாவின் உற்பத்தி திறனை மேம்படுத்தலாம் என்பதே அத்துறையின் முக்கிய எதிர்பார்ப்பு. எலக்ட்ரானிக்ஸ் துறையின் தொழில் வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த பட்ஜெட்டில் அவர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகுமா என்பதை தெரிந்து கொள்ள நாம் ஜூலை 23-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications