பட்ஜெட் எப்போது..? 18வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியது..!!

நரேந்திர மோடி 3வது முறையாகப் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்திய மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில் எதிர்க்கட்சியிடம் இருந்து மக்கள் சிறந்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை எதிர்க்கட்சிகள் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என பேசினார்.

பட்ஜெட் எப்போது..? 18வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியது..!!

இதைத் தொடர்ந்து விக்சிட் பார்த் கனவை இந்தியா அடைய நாடாளுமன்ற இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து 2வது முறையாக ஒரே கட்சி 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது எனவும் பேசினார்.

18வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியதும், லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி முதலில் நாடாளுமன்றத்தில் எம்பியாக பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் அனைத்து மக்களின் அடுத்த முக்கிய எதிர்பார்ப்பாக இருப்பது பட்ஜெட் எப்போது என்ற கேள்விக்கான பதில் தான். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த 7வது பட்ஜெட் தாக்கல் சாதனைக்குரிய விஷயமாகும். எந்தொரு நிதியமைச்சரும் இதுவரையில் தொடர்ச்சியாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்தது கிடையாது.

இதேவேளையில் தொடர்ச்சியான உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலைகள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பொருளாதார மந்தநிலை மற்றும் ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனம், காசா ஆகியவற்றில் நிலவும் மோதல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் அடுத்த 5 ஆண்டுக்கான மோடி 3.0 அரசின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான ரோடு மேப்-ஐ இந்த பட்ஜெட் மூலம் முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும் காட்ட உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 2024 இன் இறுதியில் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார். சரியான நாள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் ஜூலை 20ஆம் தேதிக்கு மேல் ஜூலை 25 ஆம் தேதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம்.

ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும், இந்தியாவின் கார்ப்பரேட் துறையைச் சேர்ந்த தலைவர்கள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைப்பது இயல்பான ஒரு விஷயம், அந்த வகையில் இந்த வருடம் தனிநபர்கள் மீதான வருமான வரிச் சுமையைக் குறைக்கவும், மூலதனச் செலவினங்களை அதிகரிக்கவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் தான் அதிகப்படியான கோரிக்கைகள் வந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதங்களில், தொழில்துறை பிரதிநிதிகள் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இந்தியப் பொருளாதாரத்திற்கு முக்கியமான மற்றும் புதிய வேலைவாய்ப்புக்கான முக்கிய ஆதாரமாக விளங்கும் MSME (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்) துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தொழில்துறை பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

இந்த பட்ஜெட்டில் வருமான வரியை குறைப்பது அல்லது வரி விலக்கு வரம்பை அதிகரிப்பது தான் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+