டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் சனிக்கிழமை 2025 -26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக கூடும் என்று எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
குறிப்பாக மக்கள் சொந்தமாக வீடு வாங்கும் போக்கை அதிகரிக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை சொந்த வீடு என்பது பலருடைய வாழ்க்கை கனவாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் சொத்துக்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

இதனால் பலரும் வங்கியில் கடன் வாங்கி தான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். இப்படி வீட்டுக்கடன் வாங்குவோருக்கு சிறப்பு வரி சலுகைகளை அரசு அறிவித்தால் அனைவருக்கும் சொந்த வீடு என்ற இலக்கை எட்ட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
WealthinIndia.com இணையதளத்தின் நிறுவனர் கரன்சந்தானி அரசு வீட்டுக் கடன் சம்பந்தப்பட்ட வரி சலுகைகளை வழங்கினால் நிச்சயம் பலரும் சொந்தமாக வீடு வாங்குவதற்கு முன் வருவார்கள் என தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கடன் வட்டிக்கான வரி விலக்கு: தற்போது இந்தியாவில் வீட்டு கடன் வாங்கி இருக்கும் நபர்கள் வருமானவரி சட்டத்தின் பிரிவு 24 பி-இன் கீழ் அந்த கடனுக்காக அவர்கள் செலுத்தக்கூடிய வட்டி தொகைக்கு ஓர் ஆண்டு 2 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.
இந்தியாவில் வீட்டு கடன்களுக்கான வட்டிவிகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசு இந்த 2 லட்சம் ரூபாய் என்ற வரம்பினை ஒரு நிதியாண்டுக்கு 3 லட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இது மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகச்சிறந்த ஒரு அறிவிப்பாக அமையும் என கரன்சந்தானி கூறுகிறார்.
வீட்டுக்கடன் அசல் தொகை: வீட்டுக் கடனுக்காக நாம் செலுத்தும் அசல் தொகையை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி-இன் கீழ் குறிப்பிட்டு ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். ஆனால் 80சி பிரிவின் கீழ் தான் மற்ற சேமிப்பு மற்றும் முதலீடுகளையும் நாம் கணக்கு காட்ட வேண்டி இருக்கிறது. எனவே அரசு வீட்டுக் கடனுக்காக செலுத்தக்கூடிய அசல் தொகைக்கு தனி பிரிவை ஏற்படுத்தி வருமான வரி விலக்கு வழங்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு சலுகை: இந்தியாவில் 45 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட வீடுகளை வாங்குபவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் வருமான வரி விலக்கு வழங்கப்பட்டது. இதனை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
அதே போல இரண்டு பேர் இணைந்து கூட்டாக கடன் வாங்கும் போது இருவருக்குமே வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகைக்கு வரி விலக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரன்சந்தானி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications