மத்திய பட்ஜெட் 2025 LIVE: ரூ.12 லட்சம் வரை '0' வருமான வரி..! மாத சம்பளக்காரர்கள் கொண்டாட்டம்..!
Budget 2025 LIVE: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மோடி அரசின் மூன்றாவது பதவிக் காலத்தின் முதல் முழு பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் அதிரடியான பல அறிவிப்புகள் வந்தது. குறிப்பா வருமான வரி, ஹெல்த்கேர் துறை, விவசாயம், கிக் ஊழியர்களுக்கான அறிவிப்புகள் என நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகம் பலன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இருப்பினும், பொருளாதார நிலைமை சவால்களை எதிர்கொள்கிறது. பொருளாதார ஆய்வறிக்கை, நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.4% ஆக குறையும் என்று கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் 8.2% வளர்ச்சியிலிருந்து குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமாகவும் இது அமைகிறது. "விக்சித் பாரத்" (வளர்ந்த இந்தியா) என்ற அரசின் லட்சியத்தை 2047 ஆம் ஆண்டிற்குள் அடைய 8% ஆண்டு வளர்ச்சி தேவைப்படுகிறது.
இந்த இலக்கை அடைய 2025-26ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் மற்றும் தொழிலாளர் துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.
2025-26ம் நிதியாண்டிற்கான கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம், கடந்த ஆண்டின் வலுவான வளர்ச்சி எண்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் குறிக்கிறது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் உள்நாட்டு சவால்கள் உள்ளிட்ட காரணிகளால் இந்தியப் பொருளாதாரம் சவால்களை எதிர்கொள்கிறது.
இந்த கணிப்புகள் 2025-26ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. தற்போதைய பொருளாதார யதார்த்தங்களை கையாண்டு நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி பாதையில் இந்தியப் பொருளாதாரத்தை வழிநடத்த இந்த பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கும்.
Feb 01, 2025, 4:02 pm IST
கலால் வரி பங்கீடு உயர்வு
கலால் வரி மற்றும் சுங்க வரி முறையே 5 பைசா மற்றும் 4 பைசா வரும்.
Feb 01, 2025, 4:02 pm IST
ஒரு ரூபாயில் 66 பைசா - நேரடி மற்றும் மறைமுக வரி பங்கீடு
அரசுக்கு வருவாயில் 66 பைசா நேரடி மற்றும் மறைமுக வரிகளிலிருந்து வரும். இதில், 39 பைசா நேரடி வரிகளிலிருந்து வரும். வருமான வரி 22 பைசாவும், கார்ப்பரேட் வரி 17 பைசாவும் வரும்.
Feb 01, 2025, 4:01 pm IST
ரயில்வே மூலதனச் செலவினங்களில் இரட்டை இலக்க உயர்வு
ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே மூலதனச் செலவினங்களில் இரட்டை இலக்க உயர்வு அறிவிக்கப்படாதது முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது.
Feb 01, 2025, 3:56 pm IST
வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது
வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது
Feb 01, 2025, 3:56 pm IST
வாடகை வருவாயில் TDS வசூலிக்கப்படும் வரம்பு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்வு
வாடகை வருவாயில் TDS வசூலிக்கப்படும் வரம்பு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்வு
Feb 01, 2025, 3:56 pm IST
80CCD(1B) வரி விலக்குகள் NPS வாட்சல்ய கணக்குகளுக்கும் நீட்டிப்பு
80CCD(1B) வரி விலக்குகள் NPS வாட்சல்ய கணக்குகளுக்கும் நீட்டிப்பு
Feb 01, 2025, 3:31 pm IST
மத்திய நிதியமைச்சர், நகைகளுக்கான (குறியீடு: 7113) இறக்குமதி வரியை 25% -லிருந்து 20% ஆகக் குறைத்துள்ளார். இது 2025 பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வரும். பிளாட்டினம் பைன்டிங்ஸ் இறக்குமதி வரி 25% -லிருந்து 5% ஆக கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட நகைகளின் விலை குறைய உள்ளது.
Feb 01, 2025, 3:27 pm IST
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்: வின்னர்
இந்தியாவின் தொடக்க நிறுவன சுற்றுச்சூழலை வலுப்படுத்த ரூ. 100 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Feb 01, 2025, 3:27 pm IST
இளைஞர்கள் மற்றும் கல்வி: வின்னர்
முன்னணி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை விரிவாக்கம் (10,000 கூடுதல் இடங்கள்).
செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
Feb 01, 2025, 3:27 pm IST
உற்பத்தித் துறை: வின்னர்
இந்தியா பொம்மை உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாறும்.
சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க புதிய கொள்கைகள்.
Feb 01, 2025, 3:27 pm IST
விவசாயம்: வின்னர்
17 மில்லியன் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்படும்.
பருப்பு தானியங்களில் சுயசார்பு அடைய ஆறு ஆண்டு திட்டம்.
பீஹாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும்; அசாமில் உர தொழிற்சாலை அமைக்கப்படும்.
Feb 01, 2025, 3:04 pm IST
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தியுள்ளார், இருப்பினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Feb 01, 2025, 3:04 pm IST
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை இலக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக நிர்ணயித்துள்ளார்.
Feb 01, 2025, 3:03 pm IST
அரசு வரி விகிதங்களில் மாற்றங்கள் காரணமாக ரூ. 1 லட்சம் கோடி நேரடி வரிகள் மற்றும் ரூ.2,600 கோடி மறைமுக வரிகளை இழக்கும்.
Feb 01, 2025, 2:57 pm IST
NPS வாட்சல்ய
மத்திய நிதியமைச்சர், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80CCD(1B) இன் கீழ் வரும் வரி விலக்குகள் NPS வாட்சல்ய கணக்குகளுக்கும் நீட்டிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
Feb 01, 2025, 12:24 pm IST
புதிய வரி விதிப்பு முறையில் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இது முன்பு ரூ.7 லட்சமாக இருந்தது.
வருமானம் ரூ. 12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இந்த மாற்றம் மூலம் ரூ. 80,000 லாபம்.
வருமானம் ரூ. 18 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இந்த மாற்றம் மூலம் ரூ. 70,000 வரை லாபம்.
வருமானம் ரூ. 24 லட்சம் வரை உள்ளவர்களுக்கு ரூ. 1.1 லட்சம் வரை லாபம்.
Feb 01, 2025, 12:20 pm IST
புதிய வரி முறையில் 12 லட்சம் வரை ஜீரோ வரி
புதிய வரி விதிமுறைகளின்படி, வருமான வரி இத்தகையதாக இருக்கும்:
12,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை.
4,00,001 முதல் 8,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும்.
8,00,001 முதல் 12,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும்.
12,00,001 முதல் 16,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15% வரி விதிக்கப்படும்.
16,00,001 முதல் 20,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்படும்.
20,00,001 முதல் 24,00,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25% வரி விதிக்கப்படும்.
24,00,000 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.
Feb 01, 2025, 12:13 pm IST
வாடகை வருவாயில் TDS வசூலிக்கப்படும் வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும்
மூத்த குடிமக்களுக்கு வட்டி வருமானத்தில் இருந்து வரி பிடித்தம் செய்யப்படும் வரம்பு ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும்.
வாடகை வருவாயில் TDS வசூலிக்கப்படும் வரம்பு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும். இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.
Feb 01, 2025, 12:12 pm IST
வருமான வரி பிடித்தம் (TDS) கழிப்புகளை சுருக்கி, வரி பிடித்தம் செய்யப்படும் விகிதங்கள் மற்றும் வரம்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வரி விதிப்பில் தெளிவு மற்றும் ஒருங்கிணைப்பிற்காக TDS கழிப்பிற்கான வரம்புகள் உயர்த்தப்படும்.
Feb 01, 2025, 12:09 pm IST
பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 2 கோடி வரை டேர்ம் லோன்
Feb 01, 2025, 12:09 pm IST
ரூ.5 லட்சமாக அதிகரித்த கிசான் கிரெடிட் கார்டு.. விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் வெளியான ஹேப்பி நியூஸ்.!!
Feb 01, 2025, 12:08 pm IST
வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
Feb 01, 2025, 12:08 pm IST
மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு உயர்வு
தனிநபர் வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Feb 01, 2025, 12:07 pm IST
புதிய வருமான வரி மசோதா, வரி செலுத்துவோர் மற்றும் வரி நிர்வாகிகளுக்கு எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான மற்றும் நேரடியான மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Feb 01, 2025, 12:07 pm IST
பட்ஜெட் 2025-26-ல், அடிப்படை சுங்க வரியான BCD-யில் இருந்து கோபால்ட் பவுடர், லித்தியம்-அயன் பேட்டரி கழிவுகள் மற்றும் ஸ்கிராப் உள்ளிட்ட 12 முக்கியமான தாதுக்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உற்பத்தி துறைக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் லாபகரமானதாக இருக்கும்.
Feb 01, 2025, 12:03 pm IST
7 வகை இறக்குமதி வரி நீக்கம்
இனிமேல் 8 வகை இறக்குமதி வரியே இருக்கும்: மத்திய அரசு 7 வகை இறக்குமதி வரியை நீக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.
ருத்தமான கட்டணம் விதிக்கப்படும்: இனிமேல் ஒரே ஒரு வகை கட்டணம் மட்டுமே விதிக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
சமூக நல கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது: சமூக நலனை மேம்படுத்துவதற்காக சமூக நல கட்டணம் அறிவிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
Feb 01, 2025, 12:00 pm IST
மூலதனச் செலவுக்காக ரூ.10.18 லட்சம் கோடி ஒதுக்கீடு
2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மூலதனச் செலவுக்காக ரூ.10.18 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை அளிப்பதை காட்டுகிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட இது 8.4% குறைவு.
Feb 01, 2025, 11:54 am IST
மாநிலங்களின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
மாநிலங்களின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: இதற்காக 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படும்.
இரண்டாவது சொத்து மதிப்பீட்டு திட்டம் (Second Asset Monetisation plan) 2025-2030 க்கு அறிவிக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் ரூ.10 லட்சம் கோடி நிதி புதிய திட்டங்களுக்கு முதலீடு செய்யப்படும்.
Feb 01, 2025, 11:51 am IST
புதிய வருமான வரி மசோதா தாக்கல்
அடுத்த வாரம் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் மறைமுக வரி மற்றும் நேரடி வரிகளில் முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
Feb 01, 2025, 11:51 am IST
கிராமப்புறங்களில் புற்றுநோய் சிகிச்சைக்கு வரப்பிரசாதம்
அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை கிடைக்கும் தன்மை அதிகரிக்கும். 2025-26 நிதியாண்டில் மட்டும் 200 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
Feb 01, 2025, 11:49 am IST
பிரதான் மந்திரி ஸ்வனிதி திட்டம் - வியாபாரிகளுக்கு கடன் உதவி
68 லட்சத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பயனளித்து வரும் பிரதான் மந்திரி ஸ்வனிதி திட்டம் மேம்படுத்தப்படவுள்ளது. அதிகரிக்கப்பட்ட கடன் வசதி, யூபிஐ இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவு வழங்கப்படும்.
Feb 01, 2025, 11:49 am IST
கிக் ஊழியர்களுக்கு சுகாதார காப்பீடு
ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஈ-சரம் போர்ட்டலில் பதிவு செய்து ஐடி கார்டுகள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடி கிகு தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
Feb 01, 2025, 11:43 am IST
அணுசக்தி: 2047 ஆம் ஆண்டுக்குள் 10 கிகாவாட் அணுசக்தி உற்பத்தி திறனை அதிகரிக்க இலக்கு
2047 ஆம் ஆண்டுக்குள் 10 கிகாவாட் அளவிற்கு அணுசக்தி உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அணுசக்தி சட்டங்களில் அவசியமான திருத்தங்கள் செய்யப்படவுள்ளன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2033 ஆம் ஆண்டுக்குள் 5 சொந்தமாக உருவாக்கப்பட்ட சிறு அணு உலைகள் செயல்படத் தொடங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:41 am IST
விமான சேவை துறையில் பிராந்திய இணைப்புக்காக மாற்றியமைக்கப்பட்ட உதான் திட்டம் அறிவிக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி கூடுதல் பயணிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ் சிறிய விமான நிலையங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.
பீஹார் மாநிலத்திற்கான மூன்றாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
Feb 01, 2025, 11:40 am IST
கப்பல் கட்டுமானத்துக்கு ரூ.25,000 கோடி மதிப்பிலான கடல்சார் மேம்பாட்டு பண்ட் அமைக்கப்படும். இதில் 49% அரசு பங்களிப்பும், மீதமுள்ள தொகை துறைமுகங்கள் மற்றும் தனியார் துறையினரால் திரட்டப்படும்.
Feb 01, 2025, 11:40 am IST
நகர்ப்புற உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கும். இதில் 50% நிதி கடன், கடன் மற்றும் பொது தனியார் கூட்டாண்மை மூலம் திரட்டப்படும். 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு ரூ.10,000 கோடி.
Feb 01, 2025, 11:35 am IST
அடுத்த ஐந்தாண்டுகளில் மொத்தம் 75,000 இடங்கள் அதிகரிக்கும் வகையில் விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என நிதியச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:35 am IST
வரும் ஆண்டில், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மேலும் 10,000 இடங்கள் சேர்க்கப்படும் என நிதியச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:35 am IST
கடந்த 10 ஆண்டுகளில், மருத்துவ உயர் கல்வி விரிவாக்கத்தில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. இதன் விளைவாக, 1.1 லட்சம் புதிய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்கள் அதிகரித்துள்ளன என நிதியச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
Feb 01, 2025, 11:33 am IST
நகர்ப்புற சவால்கள் நிதியம் - ரூ. 1 லட்சம் கோடி நிதி நிறுவப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:33 am IST
"தற்போது, 1 கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்த ஒன்றிணைந்துள்ளன," என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:33 am IST
முதல் முறையாக தொழில் தொடங்கும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 2 கோடி வரை டேர்ம் லோன் வழங்கும் புதிய திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:30 am IST
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக ரூ. 10,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு
தொழில் முனைவோர் நிதியத்திற்கு அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ள ரூ. 10,000 கோடிக்கு கூடுதலாக மேலும் ரூ. 10,000 கோடி புதிய நிதியாக ஒதுக்கப்படுகிறது.
Feb 01, 2025, 11:29 am IST
காலணி மற்றும் தோல் துறைகளுக்கான "ஃபோகஸ் தயாரிப்பு திட்டம்" (Focus Product Scheme) மூலம் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ரூ. 4 லட்சம் கோடி வருவாய் மற்றும் ரூ. 1.1 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:29 am IST
புட் பிராசசிங் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (National Institute of Food Technology, Entrepreneurship and Management) அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:26 am IST
விவசாயிகளுக்கான கடன் வசதியை அதிகரிக்க Kisan Credit Card வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
Feb 01, 2025, 11:26 am IST
MSME: கடன் வரம்பை உயர்த்துவது மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி கடன் கிடைக்கும். மேலும், அதிக தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மூலதனத்திற்கான சிறந்த அணுகலை அடைய, அனைத்து MSMEs களுக்கும் முதலீடு மற்றும் வருவாய் வரம்பு முறையே 2.5 மற்றும் 2X ஆக உயர்த்தப்படும்.
Feb 01, 2025, 11:26 am IST
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) க்கான கடன் உத்தரவாதக் கவரேஜ் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:26 am IST
மத்திய அரசு, இந்தியாவை உலகளாவிய பொம்மை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்தும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 01, 2025, 11:22 am IST
இந்த திட்டத்தின் நோக்கம், வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலை தேடி வெளியே செல்லும் நிலையை மாற்றுவதாகும்.
Feb 01, 2025, 11:22 am IST
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து 'தன் தன்ய கிரிஷி யோஜனா' அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 100 மாவட்டங்களை உள்ளடக்கும். இதன் மூலம் 1.7 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
Feb 01, 2025, 11:22 am IST
நிதியமைச்சர், பீகாரில் மக்கான போர்டு அமைக்கப்படுவதாக அறிவித்தார். இது மாநில மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.
Feb 01, 2025, 11:19 am IST
இந்த திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Feb 01, 2025, 11:19 am IST
பிரதமர் கிரிஷி யோஜனா என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து, குறைந்த மகசூல், குறைந்த பயிர் விளைச்சல் மற்றும் குறைந்த கடன் வசதி கொண்ட 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உதவிகள் செய்யப்படும்.
Feb 01, 2025, 11:19 am IST
திருத்தப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், KCC மூலம் பெறப்படும் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியம் ரூ.3,000-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் விவசாய உற்பத்திக்கு அதிக நிதி உதவி கிடைக்கும்.
Feb 01, 2025, 11:19 am IST
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் குறுகிய கால கடன்களை பெறலாம்.
Feb 01, 2025, 11:16 am IST
நிதியமைச்சர், முக்கிய துறையான வேளாண்மை துறையிலிருந்து தொடங்கி குறிப்பிட்ட திட்டங்களை வகுத்துள்ளார்.
Feb 01, 2025, 11:16 am IST
இந்த முயற்சி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தொடரும், விவசாயிகளுக்கு ஆதரவையும் உத்தரவாதமான கொள்முதலையும் உறுதி செய்யும்.
Feb 01, 2025, 11:16 am IST
நபார்டு மற்றும் என்.சி.சி.எப் போன்ற மத்திய அமைப்புகள், அமைப்புகளில் பதிவு செய்து ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகளிடமிருந்து இந்த மூன்று பருப்பு வகைகளையும் கொள்முதல் செய்ய தயாராக இருக்கும்.
Feb 01, 2025, 11:16 am IST
அரசு, அடுத்த ஆறு ஆண்டுகளில் பருப்பு வகைகளில் சுயசார்பு அடைய 6 ஆண்டு திட்டத்தை தொடங்கும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
Feb 01, 2025, 11:16 am IST
நிதியமைச்சர், "இந்த பட்ஜெட், 'விகசித் பாரத்' என்ற எங்கள் லட்சியங்களை நோக்கி வளர்ச்சியை துரிதப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Feb 01, 2025, 11:16 am IST
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், வளர்ச்சியை துரிதப்படுத்தும் வகையில் முக்கிய துறைகளான வரிவிதிப்பு, மின்சாரம், நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித்துறை மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துகிறது.
Feb 01, 2025, 10:55 am IST
பட்ஜெட் சந்தைக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்படுவதால், சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரையில் உயர்ந்து.
Feb 01, 2025, 10:54 am IST
திட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 6.58% அதிகரித்து ரூ.1,087 ஐ எட்டியது. அதேபோல் ரயில் விகாஸ் நிக்கம் லிமிடெட் (RVNL) நிறுவனத்தின் பங்குகளும் விலை உயர்ந்தன.
Feb 01, 2025, 10:54 am IST
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான மூலதனச் செலவினங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
Feb 01, 2025, 10:54 am IST
ரயில்வே துறை நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 6.6% வரை உயர்ந்தன.
Feb 01, 2025, 10:40 am IST
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Feb 01, 2025, 10:12 am IST
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்துவிட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் இருந்து புறப்பட்டார்.
Feb 01, 2025, 10:11 am IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தார். அவர் விரைவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
Feb 01, 2025, 10:09 am IST
பட்ஜெட் சுவாரஸ்ய தகவல்
இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே. ஷண்முகம் செட்டி 1947 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டை தோல் பையில் கொண்டு வந்தார்.
1950களில், டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஒரு கோப்பு பையை (File Bag) பயன்படுத்தினார்.
ஜவஹர்லால் நேரு கருப்பு நிற பிரீஃப் கேஸுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
1991 ஆம் ஆண்டில் நிலையான பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைகளை அறிவித்த மன்மோகன் சிங்கும் கருப்பு பிரீஃப் கேஸை பயன்படுத்தினார்.
பிரனாப் முகர்ஜி பிரிட்டனின் பிரபலமான "Gladstone Case" போன்ற சிவப்பு நிற பிரீஃப் கேஸை பயன்படுத்தினார்.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயல் சிவப்பு நிற பிரீஃப் கேஸை பயன்படுத்திய கடைசி நிதி அமைச்சராக இருந்தார்.
Feb 01, 2025, 10:07 am IST
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - நகர்ப்புறம் (PMAY-U) திட்டத்தின் கீழ், 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, 1.18 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கூடுதலாக ஒரு கோடி குடும்பங்களுக்கு ஆதரவளிக்க PMAY-U 2.0 தொடங்கப்பட்டது.
Feb 01, 2025, 9:55 am IST
இதன் மூலம் ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் என நிதிச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Feb 01, 2025, 9:55 am IST
2025-26 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% முதல் 4.5% வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.16 லட்சம் கோடி பற்றாக்குறையை இருக்கும்.
Feb 01, 2025, 9:55 am IST
இதன் அடிப்படையில், 2025-26 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ரூ.357.2 டிரில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024-25 நிதியாண்டில் பதிவான ரூ. 324.1 டிரில்லியனை விட அதிகமாகும்.
Feb 01, 2025, 9:55 am IST
2025-26 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 10.2% முதல் 10.3% வரை வளரக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இது 2024-25 நிதியாண்டில் கணிக்கப்பட்ட 9.7% வளர்ச்சியை விட அதிகமாகும்.
Feb 01, 2025, 9:51 am IST
அம்ரோஹாவைச் சேர்ந்த ஓவிய கலைஞர், ஜுஹைப் கான் நிலக்கரியை வைத்து சுவரில் 8 அடி நீள உருவப்படத்தை வரைந்துள்ளார் - வீடியோ
Feb 01, 2025, 9:47 am IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
Feb 01, 2025, 9:45 am IST
சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு, நிஃப்டி 23,600 புள்ளிகளை தாண்டியுள்ளது
Feb 01, 2025, 9:43 am IST
2025-26 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட் நெருங்கி வரும் நிலையில், பலரும் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில், இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை எதிர்பார்க்கின்றனர், மேலும் ஊதியம் பெறும் வர்க்கத்தினர் வருமான வரி சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.
Feb 01, 2025, 9:43 am IST
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் 2025-26 நிதியாண்டுக்கான தனது 8வது யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வரும் நிலையில், மத்திய பட்ஜெட் 2025-26 இன் பிரதிகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
Feb 01, 2025, 9:43 am IST
2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற நிலம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% முதலீட்டு விகிதத்தை அதிகரித்தல், உற்பத்தித் துறையை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
Feb 01, 2025, 9:43 am IST
2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற இந்தியாவுக்கு அடுத்த இரு தசாப்தங்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8% பொருளாதார வளர்ச்சியை பராமரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Feb 01, 2025, 9:40 am IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இல்லத்தில் இருந்து நிதியமைச்சகத்திற்கு மாருதி சியாஸ்
காரில் பாதுகாப்பு படையுடன் புறப்பட்ட வீடியோ.
Feb 01, 2025, 9:39 am IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்திற்கு வரும் வீடியோ
Feb 01, 2025, 9:38 am IST
ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திப்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சகத்திலிருந்து ராஷ்டிரபதி பவனுக்கு புறப்பட்டார்.
Feb 01, 2025, 9:38 am IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வந்தார், அவர் பாரம்பரியமான 'பாஹி கட்டா'விற்குப் பதிலாக, ஒரு டேப் மூலம் பட்ஜெட்டை முன்வைத்து வாசிப்பார்.
Feb 01, 2025, 9:33 am IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுபானி கலை மற்றும் பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் திறமையை போற்றும் வகையில் சேலை அணிந்துள்ளார்.
Feb 01, 2025, 9:32 am IST
துலாரி தேவி 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர். மிதிலா ஆர்ட் இன்ஸ்டிட்யூட்டில் கிரெடிட் அவுட்ரீச் செயல்பாட்டிற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுபானிக்குச் சென்றபோது, அவர் துலாரி தேவியைச் சந்தித்து பீகாரில் உள்ள மதுபானி கலையைப் பற்றிய தெரிந்துக்கொண்டார். துலாரி தேவி புடவையை பரிசாக அளித்த புடவையை தான் பட்ஜெட் நாளில் நிதியமைச்சர் உடுத்தியுள்ளார்,
Feb 01, 2025, 9:23 am IST
இரு சக்கர வாகன கவனம்: குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை வாங்க ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகைகள்.
Feb 01, 2025, 9:23 am IST
சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்பாடு: நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களில் பொது எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல்.
Feb 01, 2025, 9:23 am IST
வாகன ஸ்கிராபிங் திட்டம் மேம்பாடு: பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து புதிய வாகனங்களை வாங்குவதற்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும். இந்தியா முழுவதும் தானியங்கி வாகன ஸ்கிராப்பிங் வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.
Feb 01, 2025, 9:23 am IST
வரி திருத்தங்கள்: எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான GST விகிதங்களை குறைக்க வேண்டும். இதேபோல் அதிக மாசு உமிழ்வு கொண்ட டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு வரி உயர்வு (இது மிகவும் சாத்தியமற்றது)
Feb 01, 2025, 9:23 am IST
இறக்குமதி வரி மாற்றங்கள்: இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரியை மாற்றியமைக்க வேண்டும். (குறிப்பாக டெஸ்லா கார்களை கவனத்தில் கொண்டு, எலான் மஸ்க் அமெரிக்க அரசை ஆதரித்து வருகின்றார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)
Feb 01, 2025, 9:23 am IST
எலக்ட்ரிக் வாகன ஊக்கத்தொகை: எலக்ட்ரிக் வாகனங்களுக்கான FAME-II திட்டத்தின் கீழ் மானியங்களை அதிகரிக்க வேண்டும். எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி உருவாக்கத்திற்கான வரி சலுகைகளை வழங்க வேண்டும்.
Feb 01, 2025, 9:16 am IST
மிடில் கிளாஸ் மக்கள் எதிர்பார்ப்பு 4
எரிபொருள் விலை குறைப்பு:
இந்தியாவில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இதை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து, அதன் விலையை குறைக்க வேண்டும் என மிடில் கிளாஸ் மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Feb 01, 2025, 9:16 am IST
மிடில் கிளாஸ் மக்கள் எதிர்பார்ப்பு 3
முதலீட்டு லாப வரி மாற்றங்கள்:
கேப்பிடல் கெயின்ஸ் வரியை குறைப்பதை தாண்டி குறிப்பாக நிலையச் சொத்து அதாவது ரியல் எஸ்டேட் சொத்து விற்பனை தொடர்பான முதலீட்டு லாப வரி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
Feb 01, 2025, 9:16 am IST
மிடில் கிளாஸ் மக்கள் எதிர்பார்ப்பு 2
வீட்டு வசதி மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாடு:
வீட்டு கடன் வட்டிக்கான வரி விலக்கு அளவை அதிகரித்தல். இது வீடு வாங்க விரும்பும் குடும்பங்களுக்கு நிதி ரீதியான நிவாரணம் அளிக்கும்.
Feb 01, 2025, 9:16 am IST
மிடில் கிளாஸ் மக்கள் எதிர்பார்ப்பு 1
வருமான வரி குறைப்பு:
வரி விலக்கு வரம்பை உயர்த்துதல்.
வருமான வரி விகிதங்களை குறைத்தல்.
Feb 01, 2025, 7:44 am IST
பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு: பட்ஜெட் உரை Goodreturns பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
Feb 01, 2025, 7:44 am IST
பட்ஜெட் தாக்கல் நேரம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
Feb 01, 2025, 7:44 am IST
உலகளாவிய வர்த்தகத் தடைகள்: 2020 மற்றும் 2024 க்கு இடைப்பட்ட காலத்தில், வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு எதிராக 24,000-க்கும் மேற்பட்ட புதிய கட்டுப்பாடுகள் உலகளவில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
Feb 01, 2025, 7:44 am IST
பங்குச் சந்தை சிறப்பு வர்த்தகம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1, 2025), சனிக்கிழமை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை சிறப்பு வர்த்தகத்தை நடத்த உள்ளது. தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தை (BSE) ஆகியவை இந்த வார தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான சந்தை நேரங்களில் வர்த்தகம் தொடரும் என்று உறுதிப்படுத்தின. இதேபோல் அனைத்து வர்த்தகங்களும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Feb 01, 2025, 7:44 am IST
ரூபாய் மதிப்பில் சரிவு: 2024-25 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு 2.9% வீழ்ச்சியடைந்துள்ளது. கனடா டாலர், தென் கொரிய Won, பிரேசில் ரீயல் போன்ற நாணயங்களை விட ரூபாய் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
Feb 01, 2025, 7:39 am IST
பட்ஜெட் அறிவிப்புக்காகச் சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும்.
Feb 01, 2025, 7:39 am IST
இந்த வாரத்தில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 1.8% லாபம் ஈட்டியுள்ளன. இருப்பினும், ஜனவரி மாதத்தில் மொத்தமாகப் பார்த்தால் 1% க்கும் குறைவாகவே வீழ்ச்சியடைந்துள்ளன.
Feb 01, 2025, 7:38 am IST
நேற்றைய வர்த்தக முடிவில் என்எஸ்இ நிஃப்டி 1.11% உயர்ந்து 23,508.40 புள்ளிகளாகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 1% உயர்ந்து 77,500.57 புள்ளிகளாகவும் உயர்ந்தன.
Feb 01, 2025, 7:38 am IST
மூன்று வார இழப்புகளுக்குப் பிறகு முதல் திங்கள்-வெள்ளி வரை உயர்வை பதிவு செய்துள்ளது.
Feb 01, 2025, 7:38 am IST
பட்ஜெட்டில் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக தொடர்ச்சியாக லாபம் ஈட்டின.
Feb 01, 2025, 7:38 am IST
கர்ப்பப்பை புற்றுநோய்க்கு எதிரான ஹியூமன் பிலிப்போமா வைரஸ் (HPV) தடுப்பூசியைத் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் வெளியிடலாம்.
Feb 01, 2025, 7:38 am IST
இன்றைய பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விபரங்கள்: நிதிப் பற்றாக்குறை, மூலதனச் செலவினம், நாட்டின் கடன் பாதை, கடன் வாங்கும் அளவீடு, வரி வருவாய், ஜிஎஸ்டி, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), ஈவுத்தொகை, அரசு சொத்துகளை விற்பனை அல்லாத நீண்ட கால குத்தகை முறையில் கவனம்.
Feb 01, 2025, 7:38 am IST
நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் குறைக்க பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்கும் என்ற கருத்தும் உள்ளது. இன்று காலையில் எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Feb 01, 2025, 7:38 am IST
நடுத்தர வர்க்கத்தின் மீதான விலைவாசி அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, வருமான வரி விகிதங்கள், வருமான வரி விலக்குகள் மற்றும் வருமான வரி கழிவுகளில் மாற்றங்களை இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வருவார் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Feb 01, 2025, 7:32 am IST
பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு நில சீர்திருத்தம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தம் அவசியம் என பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
Feb 01, 2025, 7:32 am IST
2047 ஆம் ஆண்டில் விகசித் பாரத் இலக்கை அடைய, ஆண்டுக்கு 8% வளர்ச்சி விகிதம் அவசியம் என்பதால் இந்த இலக்கை அடைவதில் பெரும் சவால் இருக்கப்போகிறது.
Feb 01, 2025, 7:32 am IST
2026 நிதியாண்டில் 6.3% முதல் 6.8% வரை தேசிய வருவாய் வளர்ச்சி இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது.
Feb 01, 2025, 7:32 am IST
2024-25 நிதியாண்டில் GDP வளர்ச்சி 6.4% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஒரு தசாப்தத்தில் மிகக் குறைந்த வளர்ச்சி ஆகும்.
Feb 01, 2025, 7:32 am IST
நடுத்தர வர்க்கத்திற்கு வரி நிவாரணம் வழங்குவதற்கும், பொருளாதார வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சமன் செய்யும் முயற்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் வெளியிட உள்ளார்.
Feb 01, 2025, 7:32 am IST
மோடி 3.0 ஆட்சியின் முதல் முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
Jan 31, 2025, 1:05 pm IST
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான 2025 பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அந்நாளில் பங்குச்சந்தை மூடப்படுமோ என கூறப்பட்ட நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதியன்று பங்குச் சந்தைகள் வர்த்தகத்திற்காகத் திறந்திருக்கும் என்று தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) என டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் இன்று சிறப்பு வர்த்தக நாளாக கருதி பங்குச்சந்தை முழுவதுமாக இயங்கும்.
Jan 31, 2025, 1:05 pm IST
இன்று தாக்கல் செய்யப்பட்டும் பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jan 31, 2025, 1:05 pm IST
புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் மூத்த குடிமக்களின் வருமான வரியை கணக்கிடுவதற்கு புதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
Jan 31, 2025, 1:04 pm IST
இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி தாக்கல் நடைமுறையில் வீட்டுக் கடனுக்கான வரி விலக்கை இணைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. பழைய வரி நடைமுறையில் வீட்டு கடனுக்கு செலுத்தக்கூடிய வட்டியில் ஒரு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.
Jan 31, 2025, 1:04 pm IST
தற்போதைய நிலவரப்படி தங்கத்திற்கான ஜிஎஸ்டி விகிதம் 3 சதவீதம் ஆகும். இதை 1 சதவீதமாக குறைக்க நகை துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.
Jan 31, 2025, 1:04 pm IST
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், இதன் விவை அதிக அளவில் குறைந்து. இந்த முறை தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்குமாறு நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Jan 31, 2025, 1:04 pm IST
மிகக் குறைந்த பட்ஜெட் உரை வாசிப்பு என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஹெச் எம் பட்டேல். 1977 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை வாசித்த போது வெறும் 800 வார்த்தைகள் கொண்ட ஆவணத்தை தான் அவர் தாக்கல் செய்தார்.
Jan 31, 2025, 1:04 pm IST
அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட்டை வாசித்தவர் என்ற பெருமை மன்மோகன் சிங் அவர்களையே சாரும். அவர் 18,650 வார்த்தைகளை படித்திருக்கிறார்.
Jan 31, 2025, 1:04 pm IST
இந்திய வரலாற்றில் நீண்ட நேரம் பட்ஜெட் உரையை வாசித்தவர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு தான் இருக்கிறது. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை 162 நிமிடங்களுக்கு வாசித்தார்.
Jan 31, 2025, 1:04 pm IST
மத்திய பட்ஜெட் உரை சராசரியாக 90 நிமிடங்களில் இருந்து 120 நிமிடங்களுக்குள் வாசிக்கப்பட்டுவிடும். சில சமயங்களில் 120 நிமிடங்களை கடந்துவிடும்.
Jan 31, 2025, 1:04 pm IST
முன்பெல்லாம் பட்ஜெட் ஆவணத்தை பேப்பரில் அச்சிடப்பட்டு நிதி அமைச்சர்கள் அவற்றை வாசிப்பார்கள். ஆனால் 2021 ஆம் ஆண்டிலிருந்து டேப் (Tab) மூலம் பட்ஜெட் உரை வாசிக்கப்படுகிறது.
Jan 31, 2025, 1:04 pm IST
பட்ஜெட் தயாரிக்கும் பணி என்பது பட்ஜெட் தாக்கலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இருந்தே நிதித்துறையை சேர்ந்த அதிகாரிகள் பட்ஜெட் தாக்கல் பணிகளை தொடங்கி விடுவார்கள்.
Jan 31, 2025, 1:04 pm IST
வருமானம் : வரி மூலம் கிடைக்கும் வருமானங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானங்கள், அரசு பெறப்போகும் கடன்கள், அரசு பத்திரங்களை விற்பனை செய்து திரட்ட இருக்கும் நிதிகள் ஆகியவை வருவாய் என்ற பிரிவின் கீழ் வரும்.
Jan 31, 2025, 1:04 pm IST
செலவினம்: மக்கள் நல திட்டங்கள், பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட நிதிகள், அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி, இறக்குமதி ஆகியவை செலவினத்தில் வரும்.
Jan 31, 2025, 1:04 pm IST
பட்ஜெட் தயாரிக்கப்படும் போது இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் - செலவினம், வருமானம்
Jan 31, 2025, 1:04 pm IST
இந்தியாவில் நிதியாண்டு என்பது ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை கணக்கிடப்படுகிறது. இந்த காலகட்டத்திற்கான நிதிநிலை அறிக்கை தான் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும்.
Jan 31, 2025, 1:04 pm IST
மத்திய பட்ஜெட் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கான ஓர் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு அறிக்கை ஆகும். இந்த பட்ஜெட்டில் அந்த ஓராண்டு காலத்தில் அரசு எவ்வளவு செலவு செய்யப் போகிறது, எவ்வளவு வருவாய் எதிர்பார்க்கிறது என்னென்ன நலத்திட்டங்களை செயல்படுத்த போகிறது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கி இருக்கும்.
Share This Article
English summary
Union Budget 2025 LIVE News Tamil: Modi 3.0 Budget, Nirmala Sitharaman Key Announcements, Analysis, Highlights
Budget 2025 LIVE [மத்திய பட்ஜெட்] News Updates in Tamil: Stay updated with the latest Union Budget 2025 highlights, key announcements, income tax changes, government policies, and economic impact. Get real-time Tamil budget news, expert analysis, and expectations.
Story first published: Friday, January 31, 2025, 12:03 [IST]