பொதுமக்கள் மத்தியில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தற்போது காப்பீட்டு விற்பனை அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் நம் நாடு 10வது பெரிய காப்பீடு சந்தையாக உள்ளது. 2032ம் ஆண்டுக்குள் 6வது இடத்துக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இந்த வளர்ச்சியை எட்டவேண்டுமானால், இந்த துறையில் அதிகளவில் புதிய நிறுவனங்கள் களம் இறங்க வேண்டும், அதிக தொழில்நுட்ப முன்னேற்றங்களை புகுத்த வேண்டும் மற்றும் அனைத்து பகுதியினரையும் சென்றடைய டிஜிட்டல் பயன்பாடும் அவசியம். மேலும் நம் நாட்டின் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல அரசாங்கத்தின் கொள்கை தலையீடும் மிகவும் தேவையான ஒன்றாகும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. காப்பீட்டு துறையை மேம்படுத்த மத்திய பட்ஜெட்டை மத்திய அரசுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு பயன்படுத்தலாம். மேலும் ஏற்கனவே காப்பீட்டு நிறுவனங்கள் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.
மருத்துவ மற்றும் டேர்ம் காப்பீட்டை மிகவும் மலிவு விலையில் சமானிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பை வழங்கும் காப்பீட்டு பாலிசிகளை மக்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் வரி விலக்கை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட அரசிடம் காப்பீட்டு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதவிர காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தினால், இத்துறையில் அன்னிய முதலீடு குவியும். தற்போது இத்துறையில் அன்னிய நேரடி முதலீடு 74 சதவீதமாக உள்ளது. பல தசாப்தங்களாக, முகவர்கள் தங்களது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பாலிசிகளை மட்டுமே விளம்பரபடுத்தி நுகர்வோரிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் வாங்கும் பாலிசிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்றதாக இல்லை என்ற எண்ணம் நுகர்வோரிடம் இருந்தது. இதனால் முகவர்கள் தற்போதுள்ள நடைமுறைக்கு பதிலாக பல காப்பீட்டு நிறுவனங்களிடமருந்து பாலிசிகளை நுகர்வோருக்கு வழங்க அனுமதி அளிப்பதும் குறித்தும் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் இத்துறை பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசு எதிர்வரும் பட்ஜெட்டில் காப்பீட்டு துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, காப்பீடுகளுக்கு மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பு, காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கான உச்சவரம்பு அதிகரிப்பு, காப்பீட்டு நிறுவனங்கள் ஒரே பதிவின்கீழ் ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீட்டை வழங்க அனுமதி (கூட்டு உரிமம்), கிராமபுறங்களில் காப்பீட்டை விரிவுப்படுத்த மற்றும் ஊக்குவிக்க காப்பீடுகளுக்கு சலுகை போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று இத்துறை மிகவும் எதிர்பார்க்கிறது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications