இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஎஃப்ஓ மற்றும் போர்ட் உறுப்பினரான மோகன்தாஸ் பாய் 2025-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க மக்களின் வருமான வரி விகிதங்கங்களைக் குறைக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று தன்னுடைய X பதிவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை டேக் செய்து, கடந்த சில ஆண்டுகளாக நடுத்தர வர்க்க மக்கள் வரி விதிப்பு முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வரி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
மோகன்தாஸ் பாய் தனது X பதிவில், "PM சார்.. 2025 ஆம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.. தயவுசெய்து அதை மிகப்பெரிய சீர்திருத்தங்களின் ஆண்டாக மாற்றுங்கள். 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முக்கியமான மாற்றங்களை செய்யுங்கள். மக்கள் என்டிஏ அரசாங்கம் மீது வருத்தத்தில் இருந்தாலும், உங்களுக்காக வாக்களித்துள்ளனர். 2020 முதல் 2021-ஆம் ஆண்டில் தனி நபர் வரி வசூல் 4.87 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் 10.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 114% உயர்வு.

2024 முதல் 2025-ஆம் ஆண்டில் மொத்த தனிநபர் வரி வசூல் 22 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் நிகர வரி வசூல் ரூ.12.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதிக வரி, பணவீக்கம், அதிகமான பள்ளி, கல்லூரி கட்டணங்கள், வருமானத்தின் குறைந்த அதிகரிப்பு ஆகியவற்றால் நடுத்தரவர்க்க வரி செலுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தயவு செய்து வரி அடுக்குகளை விரிவு படுத்துங்கள்.. ரூ.5 லட்சம் வரை வரி இல்லை, 5-10 லட்சம்க்கு 10% மட்டுமே, 10-20 லட்சம் 20%, 20 லட்சத்திற்கு மேல் அதிகபட்சம் 30%, சீனியர் சிட்டிசனுக்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் மட்டுமே வரி விதிக்கப்பட வேண்டும். பிரிவு 80 D மற்றும் 80G தவிர வேறு எந்த கழிவுகளும் இல்லை.
வீட்டுக்கடன் கழிவு என்பது வரி செலுத்தும்போது வீட்டுக்கடன் தவணைக்கு செலுத்திய தொகையை கழித்துக்கொள்ளும் வாய்ப்பு. ஆனால் 3.5 கோடி வரி செலுத்துவோரில் 1.2 கோடி பேர் மட்டுமே வீட்டுக்கடன் வைத்திருப்பதால், அவர்கள் மட்டுமே இந்தக் கழிவை பெறத் தகுதியுடையவர்கள்.
2014-ஆம் ஆண்டில் வாக்குறுதி அளித்தபடி வரி பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்! 2014 ஆம் ஆண்டு வரி வசூல் ரூ. 4.5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது வருமான வரித்துறை மற்றும் நிதியமைச்சகத்தின் பெரிய தோல்வியாகும்.
2020 முதல் 2026-ஆம் ஆண்டில் வரி தீர்வுக்கான ஆண்டாக மாற்றவும். வரிப் பிரச்னைகளைத் தீர்க்க கவனம் செலுத்துங்கள். 2020 முதல் 2026-ஆம் ஆண்டுக்கு புதிய பிரச்சனைகளை உருவாக்காதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் CIT A-யில் மேல்முறையீடுகள் அதிகரித்து வருகின்றன.
வரி செலுத்தும் நேர்மையான நடுத்தர வர்க்கத்திற்கு நிவாரணம் வழங்கவும். இன்று மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்தியாவில் கீழ் 60% மக்களுக்கு ரூ.900,000 கோடிக்கும் அதிகமான மானியங்களை செலவிடுகின்றன. ஆனால் நடுத்தர வர்க்கம் வரியின் பெரும் சுமையை சுமக்கிறது. ஏழைகளாகி வருகிறது மற்றும் எந்தவித நிவாரணமும் இல்லாமல் உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications