வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். ஆனால், அவரது முந்தைய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் சீதாராமன், வேளாண் துறையை பொருளாதாரத்தின் "முதல் இயந்திரம்" என்று விவரித்தார். கிசான் கிரெடிட் கார்டு கடன் வரம்பை உயர்த்துதல், பருத்தி உற்பத்தித்திறன் மேம்பாட்டு இயக்கம், அதிக மகசூல் தரும் விதைகள் தொடர்பான தேசிய இயக்கம் போன்ற பல புதிய வேளாண் திட்டங்களை அவர் அறிவித்தபோதிலும், அவற்றில் சில இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கிசான் கிரெடிட் கார்டு (KCC) வழியாகக் கிடைக்கும் கடன் திட்டத்தின் கீழ், கடன் வரம்பை உயர்த்துவது பற்றி அறிவித்த நிதியமைச்சர் சீதாராமன், "கிசான் கிரெடிட் கார்டுகள் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்குக் குறுகிய காலக் கடன்களை எளிதாக்குகின்றன. திருத்தப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், KCC மூலம் பெறும் கடன்களுக்கான வரம்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்" என்று கூறியிருந்தார். ஆனால், இந்த அறிவிப்பு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை. வேளாண் அமைச்சகம் இது குறித்த முன்மொழிவை விரைவில் அனுப்பவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதியமைச்சர் சீதாராமன், 'பருத்தி உற்பத்தித்திறன் மேம்பாட்டு இயக்கம்' குறித்து அறிவித்தபோது, "லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில், பருத்தி உற்பத்தித்திறன் மேம்பாட்டு இயக்கத்தை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஐந்தாண்டு இயக்கமானது பருத்தி சாகுபடியில் உற்பத்தித்திறன் மற்றும் நீடித்து நிலைத்தன்மையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை ஏற்படுத்தும். அத்துடன் நீளமான இழைப் பருத்தி ரக சாகுபதியை ஊக்குவிக்கும். விவசாயிகளுக்குச் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படும் என்றார்.”
அரசின் ஒருங்கிணைந்த '5F' தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, இது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும், மேலும் இந்தியாவின் பாரம்பரிய ஜவுளித் துறைக்குத் தரமான பருத்தியின் நிலையான விநியோகத்தை உறுதி செய்யும் என்றார். இத்திட்டமும் இன்னும் களத்தில் செயல்படுத்தப்படவில்லை என சொல்லப்படுகிறது.
அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய இயக்கம், பயிர் மரபணு வளங்களுக்கான இரண்டாவது மரபணு வங்கி குறித்த பட்ஜெட் அறிவிப்புகளும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. விவசாயிகளின் உற்பத்தி, திறமையான விநியோகம், பதப்படுத்துதல் மற்றும் லாபகரமான விலைகளை மேம்படுத்தும் "விரிவான திட்டம்" ஒன்றும் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வேளாண் துறையில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள பட்ஜெட் அறிவிப்புகள்: துவரம், உளுத்தம், மசூர் பருப்பு வகைகளில் தற்சார்பு இயக்கம்; பிரதம மந்திரி தன்-தான்யா கிருஷி யோஜனா - வேளாண் மாவட்ட மேம்பாட்டுத் திட்டம்; பீகாரில் உள்ள மக்கானா வாரியம் ஆகியவை ஆகும். நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications