மத்திய அரசின் 2026-27 மத்திய பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) புதன்கிழமை அறிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தக் குழு, பட்ஜெட் கூட்டத் தொடரின் முக்கிய தேதிகளை ஆலோசனை செய்து ஒப்புதல் அளித்துள்ளது. பட்ஜெட் தாக்கல் தேதி குறித்து பல்வேறு விவாதங்கள் இருந்து வரும் வேளையில் இதற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று முதல் முறையாக மத்திய அரசின் வருடாந்திர பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் வழக்கம் போல் மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்து சாதனை படைக்க உள்ளார். இதேபோல் இது இந்தியாவின் 88வது மத்திய அரசு பட்ஜெட் அறிக்கை.
மேலும் ராஜ்நாத் சிங் தலைமையிலான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 28 அன்று குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் முன்னிலையில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இதை தொடர்ந்து அடுத்த நாள் ஜனவரி 29 அன்று பொருளாதார ஆய்வறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலைமை, வளர்ச்சி விகிதம், சவால்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கும்.
நிர்மலா சீதாராமனின் சாதனை
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 9 முறை மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்து சாதனை படைக்க உள்ளார். மொரார்ஜி தேசாய், நிதியமைச்சராக இருந்தபோது 10 பட்ஜெட் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் நேரம்
2017 முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த முறை பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை என்பதால், தேதியில் மாற்றம் இருக்குமா என் கேள்வியும், சந்தேகமும் எழுந்தது. ஆனால் எந்த சந்தேகமும் இல்லை என பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 1ஆம தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் நாட்டின் பல்வேறு மானிய திட்டங்களை அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது எப்படி என்பதில் முக்கியதுவம் அளிக்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பு, வரி சீர்திருத்தங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications