நாளைய தினம் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப் போகின்றன என்று எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது.
வழக்கமாக பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த பாரம்பரியம் அப்படியே தொடரப்படுமா அல்லது தேதி மாற்றப்படுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தது. அந்த வகையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிதியமைச்சகத்தில் மிக தீவிரமாக நடைபெற்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு அல்வா தயாரிக்கும் நிகழ்வு கூட நடத்தப்பட்டது. இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியை அடுத்து பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் அனைவரும் லாக் இன் பீரியடில் வைக்கப்பட்டார்கள். அதாவது பட்ஜெட் தகவல்கள் வெளியே கசிந்து விடாமல் இருப்பதற்காக இவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் , யாருடனும் இவர்களால் தொடர்பு கொள்ள முடியாது அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை இவர்கள் நிதி அமைச்சக அலுவலகத்திலேயே தான் தங்கி இருப்பார்கள்.
இவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் சூழலில் தான் டெலிகிராமில் பட்ஜெட் ஆவணங்கள் கசிந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. பட்ஜெட் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட காபிகள் டெலிகிராமில் கசிந்ததாக தகவல் பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் பட்ஜெட் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் எப்படி கசிய விடப்பட்டிருக்கும் என அனைவரும் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த சூழலில் தான் மத்திய அரசின் செய்தி தொடர்பு துறை அலுவலகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் பரவுகின்றன. 2026 - 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் காபிகள் என அவை பகிரப்பட்டு வருகின்றன என இரண்டு புகைப்படங்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று பட்ஜெட் ஆவணத்தின் முதல் பக்கத்தையும் மற்றொன்று அறிவிப்புகள் கொண்டதாகவும் இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பட்ஜெட் ஆவணங்கள் டெலிகிராமில் கசிந்ததாக சில புகைப்படங்கள் பரவி வருகின்றன, இவை முற்றிலும் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2026- 27 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணங்கள் கிடையாது. கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆவணத்தின் முதல் பக்கத்தை எடுத்து டிஜிட்டல் முறையில் எடிட் செய்து 2026 - 2027 என எண்ணை மாற்றி போலியாக தகவல்களை பரப்பி வருகின்றனர் என குறிப்பிட்டு இருக்கிறது.
மற்றொரு புகை படமும் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறது. பொதுமக்கள் இந்த போலி தகவல்களை நம்ப வேண்டாம் என்று இதுபோன்ற தகவல்கள் தேவையற்ற பதட்டங்களை மக்களிடையே உண்டாக்கக் கூடியவை என்றும் கூறப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications