Nirmala Sitharaman: ஜென்Z-க்கள் உடன் தீவிர ஆலோசனை.. இனி இவங்க தான் எதிர்காலம்..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2027-28ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை துவங்கும் முன்பு, ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளை சேர்ந்த தலைவர்கள், முக்கிய நபர்கள், வல்லுனர்கள் என பலதரப்பினரிடம் கலந்து ஆலோசனை செய்வது வழக்கம்.

அந்த வகையில் முதல் முறையாக நிதியமைச்சர் இந்தியா பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் இளைஞர்கள் மற்றும் Gen-Z பிரதிநிதிகளுடன் பிரத்தியேகமான ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தியுள்ளார்.

Nirmala Sitharaman: ஜென்Z-க்கள் உடன் தீவிர ஆலோசனை.. இனி இவங்க தான் எதிர்காலம்..!!

இந்த பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் 13-வது கூட்டம் மற்றும் இறுதி ஆலோசனைக் கூட்டம் என்பதால் கூடுதல் ஸ்பெஷல்.

இக்கூட்டத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் இளம் ப்ரொபெஷன்ல்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துக்கொண்டனர். மேலும் கூட்டத்தில் பங்கேற்ற நபர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டோர் வைத்த முக்கியமான கோரிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்புகளுக்கு அதிக முதலீடு செய்ய வேண்டும், புதிய தொழில்நுட்பத் துறைகளை உருவாக்க வேண்டும், இதேபோல் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்த வேண்டும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க புதிய திட்டங்கள், உதவிகள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இவை அனைத்தையும் விட முக்கியமாக ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டு வரும் வேளையில் இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளனர்.

இதோடு இன்றைய தொழிற்துறைக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தைப் பெரியளவில் விரிவாக்கம் செய்து அதிகப்படியானோருக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஜென்Z தலைமுறையினர் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளனர்.

இறுதியாக இந்தியாவில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் எனவும், விளையாட்டுக்கான அனைத்து உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்நாட்டிலேயே உயர்தரத்தில் தயாரிக்கும் உற்பத்தி சூழலையும், கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இக்கோரிக்கைகளை நிதியமைச்சரும், பட்ஜெட் குழுவும் தொகுத்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட ஆலோசனை கூட்டத்தில் முக்கியமான, அவசியமான கோரிக்கைகளை தேர்வு செய்து அதை பட்ஜெட் அறிக்கையில் சேர்க்க வாய்ப்புகள் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+