Gen Z-க்களுக்கு முக்கியத்துவம்: பட்ஜெட் தயாரிப்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய வியூகம்..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளார். வழக்கம் போல இல்லாமல் இந்த முறை மத்திய பட்ஜெட் ஜென் ஸீ இளைஞர்களை மையப்படுத்தியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தற்போது ஜென் ஸீ தலைமுறையினர் தான் ஆதிக்கம் நிறைந்தவர்களாக மாறி வருகின்றனர். ஏனெனில் நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மற்றும் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சியை எட்டும் வழிவகை செய்ய போவது ஜென் ஸீ இளைஞர்கள் தான். இதனால் , வரவிருக்கும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகளில் நாட்டின் இளம் தலைமுறையினரான ஜென் ஸீ இளைஞர்களை நேரடியாக பங்குபெற செய்யும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு இளைஞர் உரையாடல்களுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gen Z-க்களுக்கு முக்கியத்துவம்: பட்ஜெட் தயாரிப்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய வியூகம்..!!

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் இதுவரை பாரம்பரியமான தொழில் மற்றும் வரி கட்டமைப்புகளை மட்டுமே மையமாக கொண்டு இருந்தது. ஆனால், நாட்டின் பெரும்பான்மையான இளைய சமுதாயம் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்யும் வகையில், அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஜென் ஸீ தலைமுறையினரின் கருத்துகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்படவுள்ளது. அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தேவைகள் என்ன என்பதை நேரடியாக கேட்டு, அதற்கேற்ப பட்ஜெட்டை வடிவமைக்க நிதியமைச்சர் களமிறங்கியுள்ளார் என தி எக்கனாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

Also Read

நம் நாட்டின் எதிர்கால தூண்களான ஜென் ஸீ இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்துகொள்ள நிதி அமைச்சகம் சார்பில் சிறப்பு உரையாடல்கள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் இளைஞர்களும் தங்களது குரலை பதிவு செய்ய இது ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் டிஜிட்டல் பொருளாதாரத்தை நம்பி வாழ்கின்றனர். ஸ்டார்ட்-அப்கள், கிரியேட்டிவ் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு , மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்புகள் போன்றவற்றுக்கு இணையாக பட்ஜெட் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு. இதனால் அவர்களின் பங்களிப்பும் முக்கியம் என அரசு கருதுகிறது.

Recommended For You

அண்மையில் கூட ஜென் ஸீ இளைஞர்களின் போராட்டம் மற்றும் எழுச்சியை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் வழியே நாம் பார்க்க நேர்ந்தது. இதனால் தான் அவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை உணர்த்த மத்திய அரசு இந்த யுக்தியைய் கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

2027ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் வழக்கமான சம்பிரதாயமான நிதி அறிக்கைகளை தாண்டி, இந்தியாவின் இளம் தலைமுறையின் துடிப்பான யோசனைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்கும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+