பட்ஜெட் வேலைகளை தொடங்கினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. டெல்லியில் நடந்த முக்கிய ஆலோசனை..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2027-28-க்கான தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளார். வரும் பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் தனது முதலாவது பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொருளாதார விவகாரத் துறை செயலர் , தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் வேலைகளை தொடங்கினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. டெல்லியில் நடந்த முக்கிய ஆலோசனை..!!

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பொது பட்ஜெட்டுக்கு முன்னதாக, நாட்டின் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் கருத்துக்களை கேட்பது வழக்கமாகும். அந்த வரிசையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதையை தக்கவைத்துக்கொள்வது குறித்தும், வரவிருக்கும் பட்ஜெட்டில் எங்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக இந்தியா பல சவால்களை சந்தித்துள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை உயர்வு , பால், அரிசி, சர்க்கரை, காய்கறி, பழங்கள் விலை உயர்வு என மக்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். எனவே அதற்கெல்லாம் நிவாரணம் தரும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். எனவே ஈரான் போர் தாக்கம், வரி வசூல், அரசு நிதி பற்றாக்குறை என பல சவால்களை அரசு சந்தித்துள்ளது.

Also Read

இந்திய ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான நாட்டின் ஜிடிபி வளர்ச்சி முன்னறிவிப்பை 40 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 7.1% ஆக உயர்த்தியுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இருந்தாலும் ஈரான் சவால் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம் நடந்திருப்பது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

பொருளாதார நிபுணர்களுடன் நடத்தப்பட்ட இந்த முதல் கட்ட ஆலோசனையை தொடர்ந்து, தொழில்துறை பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், மாநில அரசுகள் மற்றும் சமூக துறை பிரதிநிதிகளையும் சந்தித்து மத்திய அரசு கருத்துக்களை பெறவுள்ளது. இந்த ஆலோசனைகளில் பெறப்படும் அனைத்து கருத்துக்களும் இறுதி பட்ஜெட் உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும். பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், ஈரான் போர் காரணமாக மக்களூக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+