வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது, பழைய வரி மற்றும் புதிய புதிய வரி விதிப்பு முறைகளில் ஏதாவது ஒன்றை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். 2020ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு தானாகவே புதிய வரி விதிப்பு தேர்வு செய்யப்படும். பழைய வரி விதிப்புக்கு மாறினால் ஆதாயம் என்று கருதுபவர்கள் பழைய வரி விதிப்பு முறையே தேர்வு செய்து கொள்ளலாம்.
மத்திய அரசு சமீபகாலமாக அனைத்து வரி செலுத்துவோரையும் புதிய வரி விதிப்புக்கு மாற்ற வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் இதற்காக புதிய வரி விதிப்பில் பல்வேறு சலுகைகளை வழங்கி அனைவரையும் புதிய வரி விதிப்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பின்கீழ், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்றும், ரூ.12 லட்சத்துக்கும் மேல் உள்ள தனிநபர்களுக்கு வருமான வரி படிநிலைகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான வரி செலுத்துவோர் புதிய வரி விதிப்புக்கு மாறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் கூறுகையில், ரூ.12 லட்சம் வரை வரி இல்லை மற்றும் வரி சீரமைப்புகள் காரணமாக, வரி செலுத்துவோரில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் புதிய வரி விதிப்புக்கு மாற வழிவகுக்கும். தற்போது 75 சதவீதம் பேர் புதிய வரி விதிப்பில் தங்களது கணக்கை தாக்கல் செய்கின்றனர்.
வழக்கமான மனித நுண்ணறிவு சேகரிப்பு அமைப்பை தவிர, ஏஐயின் மேம்பட்ட பயன்பாட்டின் மூலம் நாட்டில் ஊடுருவாத வரி நிர்வாகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் மற்றும் வருமான வரித் துறையின் தத்துவம் மற்றும் அணுகுமுறை.
சாமானிய வரி செலுத்துவோர் தங்கள் வருமான கணக்கை தாக்கல் செய்வதற்கான வரி செயல்முறைகள் மிகவும் சிக்கலானவை அல்ல. எளிமைப்படுத்தப்பட்ட ஐடிஆர்-1, முன்பே நிரப்பட்ட வருமான வரி கணக்கு மற்றும் டிடிஎஸின் தானியங்கி கணக்கீடு உள்ளிட்டவை அவர்களுக்கு உள்ளன. பழைய வரி முறையை போல எந்த விலக்குகளோ அல்லது கழிவுகளோ புதிய வரி விதிப்பில் அனுமதிக்கப்படவில்லை.
புதிய வரி விதிப்பு முறை, வரி செலுத்துவோருக்கு எளிய கணக்கீடுகளை கொண்டுள்ளது. இதனால் வரி செலுத்துவோர் நிபுணர்கள் உதவியின்றி அவர்களே தங்கள் வருமான வரி கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications