மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசு!! 3% அகவிலைப்படி உயர்வு!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது . இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது . அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு என்பது பார்க்கப்படுகிறது . இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வின் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்தில் ஏற்கனவே கிடைக்கும் 55 சதவீத அகவிலைப்படியோடு சேர்த்து மொத்தமாக 58% அகவிலைப் படி இனி கிடைக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசு!! 3% அகவிலைப்படி உயர்வு!!

இதன் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெற இருக்கின்றனர். தீபாவளி பண்டிகை வரக்கூடிய சூழலில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் உயர்த்தி வழங்கியுள்ளது அரசு.

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது . இது தவிர ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் விலைவாசி விகிதம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு அகவிலைப்படி என்பது வழங்கப்படுகிறது. ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் அகவிலை படியாக கிடைக்கும்.

கடந்த ஜனவரி மாதம் தான் அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி 55 சதவீதமாக மாற்றியது. தற்போது அத்துடன் கூடுதலாக மூன்று சதவீதத்தை உயர்த்தி 58 சதவீதமாக வழங்குகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி இந்த அறிவிப்பு வந்திருந்தாலும் , ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிட்டு அரசு ஊழியர்களுக்கான இந்த அரியர் தொகை என்பது வழங்கப்பட்டு விடும்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவரா நீங்க? முதல்ல இதை படிங்க

உதாரணமாக ஒரு மத்திய அரசு ஊழியர் மாதத்திற்கு 18000 ரூபாய் அடிப்படை சம்பளமாக வாங்குகிறார் என்றால் அவருக்கு அந்த அடிப்படை சம்பளத்தில் 58 சதவீதம் இனி அகவிலைப்படியாக கிடைக்கும். எனவே மொத்தமாக அவருக்கு 28,440 ரூபாய் சம்பளமாக கிடைக்கும் , அதாவது கூடுதலாக 540 ரூபாயை அவர் தன்னுடைய சம்பளத்தில் பெறுகிறார். குறைந்தபட்சம் 9000 ரூபாய் ஓய்வூதியமாக பெற க்கூடிய ஒரு ஓய்வூதியதாரருக்கு இனி இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்தையும் சேர்த்து 14 ,220 ரூபாய் மொத்த ஓய்வூதிய தொகையாக கிடைக்கும்.

ஏற்கனவே 8ஆவது சம்பள கமிஷன் பணிகள் தள்ளி போவதால் குழப்பத்தில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி அன்று அகவிலைப்படி 3% உயர்வு என்ற செய்தி வந்திருக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சற்றே நிம்மதியை தந்துள்ளது. 7ஆவது சம்பள கமிஷனில் கிடைக்கும் கடைசி அகவிலைப்படி உயர்வு இது ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+