டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு 1.5 லட்சம் கோடி அளவிலான சலுகைகள் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த சலுகைகள் நிறுவனங்களின் உற்பத்தி அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் குறித்து மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், உற்பத்தி துறையை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு இதன் மூலம் சுயசார்பு இந்தியாவை உறுதிபடுத்த முடியும். இதனை கருத்தில் கொண்டு தான் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மருத்துவம், மின்னணு, ஒயிட் கூட்ஸ், ஸ்பெஷலைஸ்டு ஸ்டீல், ஆட்டோமொபைல் துறை, தொலைத் தொடர்பு துறை, டெக்ஸ்டைல்ஸ், உணவு பொருட்கள் மற்றும் சோலார் பொரூட்கள் உற்பத்தி, மொபைல் பேட்டரி உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கு சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இத்துறைகளை ஊக்கப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஊக்கத் தொகையானது சோலார் மின் உற்பத்தி துறைக்கு 4,500 கோடி ரூபாயும், இரும்பு உற்பத்தி துறைக்கு 6,322 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் துறைக்கு 57,042 கோடி ரூபாய் ஊக்கத் தொகையும், ஜவுளித் துறைக்கு 10,863 கோடி ரூபாயும், உணவு பொருட்கள் துறைக்கு10,900 கோடி ரூபாயும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதலீடுகள் வரத்து அதிகரிக்கும். இது சுயசார்பு இந்தியா திட்டத்தினை மேம்படுத்தும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் உற்பத்தி விகிதம் அதிகரிக்கும். தொழில்துறையும் மேம்படும். இதன் மூலம் ஏற்றுமதியினையும் அதிகரிக்க முடியும். ஆக நாம் இறக்குமதியினை மட்டும் நம்பாமல், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியினை இதன் மூலம் அதிகரிக்க முடியும். ஆக மொத்தத்தில் இந்தியா யாரையும் நம்பாமல் தனித்து செய்பட முடியும். இது இந்தியாவினை சுயசார்பு இந்தியாவாக மாற்ற வழிவகுக்கும். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications