பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு "விவசாய உள்கட்டமைப்பு நிதி (AIF) திட்டத்தினை விரிவு படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி நாடு முழுவதும் விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் விவசாய சமூகத்தை ஆதரிப்பதற்கும் முக்கிய முயற்சியாக AIF திட்டத்தை விரிவு படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த முயற்சிகள் AIF திட்டத்தின் கீழ் மேலும் சில நல்ல திட்டங்களை சேர்த்துக்கொண்டு, வலுவான விவசாய உள்கட்டமைப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எதிர்க்கப்படுகிறது.
விவசாய நாடாக இருக்கும் இந்தியாவில் பெரும்பாலான நேரங்களில் விளைவிக்கும் பொருட்களை சேமிப்பதற்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் காரணத்தினால் விளை பொருட்கள் வீணாகி விடுகின்றன. உதாரணமாக தக்காளி வெங்காயம், பழங்கள் போன்றவற்றை அறுவடை செய்த பின் அவற்றை சேமிப்பதற்கு ஒரு இடம் வேண்டும்.

இது போன்ற சேமிப்புக் கிடங்கு இல்லாமல் இருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த நிதி உதவி விவசாயத்திற்காக அல்ல. மாறாக அறுவடை செய்த பொருட்களை சேமித்து வைக்கும் கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த விவசாயம் உள்கட்ட அமைப்பு நிதி திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
இந்த AIF திட்டம் தற்போது அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு பயனாளிகளுக்கு உதவி வருகிறது. தற்போது இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
அதாவது விவசாயிகள், விவசாய குழுக்கள், உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், பஞ்சாயத்துக்கள் போன்ற தகுதியான பயனாளிகள் சமூகத்திற்கு பயன்படும் வகையில் விவசாய வயல்கள், விவசாய கிடங்குகள் மற்றும் செயலாக்கம் மையங்கள், விவசாயம் சார்ந்த ரிசர்ச் செய்வதற்கு தேவைப்படும் இடங்கள் ஆகியவற்றை உருவாக்க முடியும். இது சமூகத்தில் விவசாயிகளின் திறன்களை அதிகரிக்கும்.
2020-ஆம் ஆண்டு பிரதமரால் தொடங்கப்பட்டதிலிருந்து, 6,623 கிடங்குகள், 688 குளிர்சாதன அறைகள் மற்றும் 21 சிலோ ப்ராஜெக்ட்கள் AIF திட்டம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நாட்டில் சுமார் 500 லட்சம் மெட்ரிக் டன்கள் (LMT) கூடுதல் சேமிப்புத் திறன் உள்ளது. இதில் 465 LMT உலர் சேமிப்பு மற்றும் 35 LMT குளிர் சேமிப்பு திறன் கொண்ட கிடங்குகள் ஆகியவை அடங்கும், இது ஆண்டுக்கு 18.6 LMT உணவு தானியங்கள் மற்றும் 3.44 LMT தோட்டக்கலை உற்பத்திகளை பாதுகாக்க உதவுகிறது.
இன்று வரை AIF திட்டத்தின் கீழ் 74,508 திட்டங்களுக்கு 47,575 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விவசாயத் துறையில் ரூ. 78,596 கோடி முதலீட்டைத் திரட்டியுள்ளது, இதில் ரூ. 78,433 கோடி தனியார் நிறுவனங்களிலிருந்து திரட்டப்பட்டது. கூடுதலாக, AIF-இன் கீழ் அனுமதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் விவசாயத் துறையில் 8.19 லட்சம் கிராமப்புற வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
AIF திட்டத்தின் விரிவாக்கம், வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும், பண்ணை வருமானத்தை அதிகரிக்கவும் முக்கிய பங்குவகிக்கிறது.


Click it and Unblock the Notifications