டெல்லி: உலகம் முழுவதும் தற்போது செமி கண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. செமி கண்டக்டர் துறையில் முன்னிலை நாடாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா இந்த துறை சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் புதிதாக நான்கு இடங்களில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.
அமைச்சரவை கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.’

ஏற்கனவே 6 செமி கண்டக்டர் ஆலைகள்: ஏற்கனவே இந்தியாவில் குஜராத் , அசாம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆறு செமி கண்டக்டர் ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன விரைவில் மேட் இன் இந்தியா சிப்கள் இந்த ஆலைகளில் இருந்து வெளியாக போகின்றன என குறிப்பிட்டார். மத்திய அரசு செமி கண்டக்டர் துறையை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது என கூறி இருக்கும் அவர் இந்தியாவில் மேலும் நான்கு இடங்களில் செமி கண்டக்டர் ஆலைகளை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி தந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

புதிதாக 4 ஆலைகள்: இதன்படி ரூ.4594 கோடி மதிப்பீட்டில் இந்தியாவில் கூடுதலாக நாலு செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட இருக்கின்றன. ஒடிசா மாநிலத்தில் இரண்டு செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்கப்படும் எனவும் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லக்னோ மெட்ரோ விரிவாக்கம்: அதேபோல உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் தற்போது செயல்பட்டு வரக்கூடிய மெட்ரோ சேவையை விரிவாக்கம் செய்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது . இதன்படி லக்னோ மெட்ரோ சேவையானது 5801 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. லக்னோ நகரத்தின் வளர்ச்சி மற்றும் அதற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்திற்கு அனுமதி தரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
புதிய ஐஐஎம்: இதேபோல கவுஹாத்தியில் புதிதாக ஒரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தை கட்டமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை அனுமதி தந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் தற்போது ஷில்லாங்கில் ஒரு ஐஐஎம் கல்வி நிறுவனம் இருக்கிறது, இரண்டாவது ஐஐஎம் கவுஹாத்தியில் அமைய இருக்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 700 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது டேட்டோ நீர்மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த 8,145 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications