டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் அதன் மூலம் நடக்கப்படும் சூதாட்டங்கள் பலரது வாழ்க்கையையே பறிக்கும் விஷயமாக மாறி இருக்கிறது. அல்காரிதங்கள் குறித்து அறியாமல் பலரும் ஆன்லைன் சூதாட்ட தளங்கள் மற்றும் செயலிகளில் விளையாடி தங்களின் பணத்தை இழக்கின்றனர்.
இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தளங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து இருக்கிறது. பலரும் லட்சக்கணக்கான பணத்தை இந்த சூதாட்ட செயலிகளிடம் இழந்துவிட்டு பின்னர் தங்களுடைய வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக மத்திய அரசு ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் டிஜிட்டல் தளங்கள் வழியாக சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பது தண்டனைக்குரிய குற்றமாக மாறும் இதற்கு அரசுக்கு அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அரசு ஆன்லைன் விளையாட்டு மசோதாவை நிறைவேற்ற முனைப்பு காட்டுகிறது. ஆன்லைன் சூதாட்டங்களை ஊக்குவிக்கும் தளங்கள் மற்றும் செயலிகளை விளம்பரப்படுத்தும் நபர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணிக்கும் ஒரு அமைப்பாக செயல்படும் என தெரிகிறது. அனைத்து ஆன்லைன் விளையாட்டு தளங்களும் அரசின் ஒழுங்கு முறைக்கு கீழ் கொண்டு வருவது ,ஆன்லைன் விளையாட்டு தளங்கள் வாயிலாக என்னென்ன விளையாட்டுகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன அதில் எப்படி சூதாட்டம் கொண்டுவரப்படுகிறது என்பன உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கண்காணித்து குறிப்பிட்ட செயலிகளை அனுமதிப்பதா அல்லது முடக்குவதா என்ற முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
மத்திய அரசு நீண்ட காலமாகவே ஆன்லைன் விளையாட்டு தளங்களையும் ஆன்லைன் சூதாட்ட தளங்கள் குறித்தும் தன்னுடைய கவலையை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறது. மக்கள் இதில் ஈடுபடுவதை தடுக்க ஆன்லைன் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதேபோல இது போன்ற ஆன்லைன் தளங்கள் வாயிலாக வெற்றி பெறும் பரிசு பொருட்களுக்கு 30 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது.
மேலும் 2022 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை முறைகேடாக செயல்பட்ட ஆன்லைன் சூதாட்ட தளங்கள் மற்றும் விளையாட்டு செயலிகள் என 1500 தளங்கள் முடக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு மத்திய அரசு இந்திய தண்டனை சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் இந்தியாவில் அரசு அங்கீகரிக்காத சூதாட்ட தளங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications