டெல்லியில் நேற்று ஸ்டார்ட்அப் மகாகும்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இந்தியா முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக பிரத்யேக உதவி எண்ணை தொடங்கவுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இந்த தளம் தொழில்முனைவோரும் அவர்களுடைய பிரச்சனைகள் மற்றும் பரிந்துரைகளை அரசுடன் பகிர்ந்து கொள்ள உதவும் நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது, இந்த உதவி எண்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஸ்டார்ட்அப்களுக்கும் கிடைக்கும், அதனால் அவர்கள் கொள்கைகளின் மீது புகார்கள் பதிவு செய்யவோ அல்லது கருத்துகளை வழங்கவோ முடியும்.

மேலும் எந்தவொரு அதிகாரியும் ஸ்டார்ட்அப்களை தொந்தரவு செய்யும்போதோ அல்லது சட்டங்களில் ஏதேனும் மாற்றங்கள் குறித்து ஏதேனும் ஆலோசனை வழங்க விரும்பினாலோ அல்லது இந்தியாவின் தற்போதைய சட்ட எல்லைகளுக்குள் வராத எந்தவொரு தயாரிப்பு அல்லது தொழில்நுட்பத்தையும் குறிக்க விரும்பினாலும், நீங்கள் அந்த உதவி எண்களை அணுக முடியும்," என்று கோயல் கூறினார்.
பல்வேறு இந்திய மொழிகளில் தகவல் தொடர்புக்கு ஆதரவளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு இந்த உதவி மையத்துடன் சுதந்திரமாக தொடர்பு கொள்ள உதவவும் செய்யும். மேலும், ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அரசு அளிக்கும் ஆதரவை எடுத்துரைத்த கோயல், ஸ்டார்ட் இந்தியா திட்டத்தின்கீழ் ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஒவ்வொரு ஸ்டார்ட்அப்புக்கும் சராசரியாக ரூ. 20 கோடி நிதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிதி மூலம், "நாம் செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ், குவாண்டம் கணினி, இயந்திர கற்றல், துல்லியமான உற்பத்தி மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் போன்ற முன்னணி தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். மேலும், அந்த டெஸ்க் வழியாக, ஒரு ஸ்டார்ட்அப் எதுவாக இருந்தாலும், சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், தங்கள் முன்னேற்றத்திற்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை சுட்டிக்காட்டவும் முடியும் என்று அவர் கூறினார்.
இந்த நிதியின் நோக்கம், மரபுவழி முதலீட்டுத் தொகைகளை பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் தொடக்க நிலை தொழில்முனைவோர்களுக்கு ஆரம்பகட்ட நிதி ஆதரவு வழங்குவதாகும். இந்த நிதி, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், குவாண்டம் கணினி, ரோபாட்டிக்ஸ், துல்லியமான உற்பத்தி, உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பு போன்ற முன்னணி துறைகளில் செயல்படும் ஸ்டார்ட்அப்களில் கவனம் செலுத்தும், ஏனெனில் இத்தகைய துறைகள் நீண்ட கால வளர்ச்சி காலம் மற்றும் அதிகமான முதலீடு தேவைப்படுவதால் சவால்களை ஏற்படுத்துகிறது.
முதலீடு மூலம், அரசு நாட்டின் முக்கிய தேவைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய சொந்த தொழில்நுட்ப தீர்வுகளின் ஒரு பலமான வழி வாய்ப்பை உருவாக்க வேண்டும் மற்றும் இந்தியாவை உலகளாவிய புதுமைத் தலைவராக நிலைப்படுத்த வேண்டும் என்று கோயல் கூறினார். ஆரம்ப கட்ட தொழில்முனைவோருக்கு அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பகிரப்பட்ட வசதிகளை வழங்க ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு ஆதரவு மையத்தையாவது நிறுவுமாறு SIDBI வங்கியை கோயல் வலியுறுத்தியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications