நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்ற பிறகு அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி நாட்டின் முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அது முதல் இதுவரையிலான காலத்தில் ஆர்.கே. சண்முகம் செட்டி, மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி என பல திறமையான நிதியமைச்சர்களை நாடு கண்டுள்ளது.
இருப்பினும் தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களில் கொஞ்சம் தனித்துவம் வாய்ந்தவர். தொடர்ந்து அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர், நீண்ட காலம் பணியாற்றிய முதல் பெண் நிதியமைச்சர் என பல சாதனைகளை அவர் தன் வசம் வைத்துள்ளார்.

நீண்ட உரை:
2020ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் உரையாற்றினார். இது பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரை என்ற சாதனையை படைத்தது. அதற்கு முன்பும் நிர்மலா சீதாராமன்தான் நீண்ட பட்ஜெட் உரையை வழங்கி இருந்தார். 2019ல் பட்ஜெட் தாக்கல் செய்தபோது 2 மணி நேரம் 15 நிமிடங்கள் உரை வழங்கியிருந்தார்.
முதல் முழுநேர பெண் நிதியமைச்சர்:
நம் நாட்டில் முதன் முதலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் ஒரு முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும், பட்ஜெட் தாக்கல் செய்த நாட்டின் இரண்டாவது பெண் மத்தியமைச்சர் என்ற சிறப்பும் அவர் வசம் உள்ளது. இதற்கு முன் 1970ல் அப்போது நிதியமைச்சராக இருந்த இந்திரா காந்தி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால் அப்போது அவர் பிரதமராகவும் இருந்தார். நிதித்துறையை தனது கையில் வைத்திருந்தார்.
அதிக பட்ஜெட் தாக்கல்:
2024ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தார். இதன் மூலம் அதற்கு முன் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயின் சாதனையை முறியடித்தார்.
நீண்ட காலம் பணியாற்றும் பெண் நிதியமைச்சர்:
நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான். இவர் 2019ம் ஆண்டு முதல் நிதியமைச்சராக இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிறிது காலம்தான் (1 ஆண்டு) நிதியமைச்சராக இருந்தார்.
முதல் முழுநேர பெண் பாதுகாப்பு துறை அமைச்சர்:
நாட்டின் முதல் முழுநேர பெண் பாதுகாப்பு துறை அமைச்சரும் இவர்தான். 2017 முதல் 2019ம் ஆண்டு வரை நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார்.
Story written by: Subramaian


Click it and Unblock the Notifications